PUBLISHED ON : நவ 04, 2019
தொல்லியல் ஆய்வாளர்கள், ஆய்வுக்கு எப்போதும் குழுவாகச் செல்வார்கள். தொல்லியல் இடங்களைத் தேர்வு செய்வதோடு, கிராம மக்களோடு இணைந்து மண்ணைத் தோண்டத் தொடங்குவார்கள். அதற்கு என்னென்ன கருவிகளைப் பயன்படுத்துவார்கள்?
1. திசைகாட்டி
2. அகழாய்வு செய்யப்படும் இடத்தின் செயற்கைக்கோள் படம். பென்சில், நோட்டுப் புத்தகம், வரைபடத் தாள்கள்.
3. கண்டுபிடித்த தரவுகளை உடனடியாகப் பதிவுசெய்வதற்கும், மற்ற ஆய்வாளர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் மடிக்கணினி.
4. கற்களைச் சேதப்படுத்தாமல் எடுப்பதற்கு வெவ்வேறு அளவில் பிரஷ்கள்.
5. அளவீடு நாடா, நூல், ஸ்கேல்
6. கேமராக்கள்
7. தரவுகளைச் சோதனை செய்வதற்குத் தேவையான இரசாயனங்கள், மற்ற பொருட்கள்.
8. மேப்பிங்கிற்கான லேசர் தியோடோலைட்
9. பென்சில், பேனா, பின்கள், பைகள், தேவைப்படும் குறிப்புப் பொருட்கள்
10. நுட்பமான பொருட்களைத் தோண்டுவதற்கான பல் மருத்துவக் கருவிகள்
11. பொருட்களைப் பத்திரமாக வைத்துக் கொள்வதற்கான பெட்டிகள், பைகள்.
