PUBLISHED ON : நவ 21, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய 500 ரூபாய் மற்றும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இதைப் பயன்படுத்தி அடிக்கடி பணத்தை வங்கியில் மாற்றுவதைத் தடுக்கும் வகையில் விரலில் அடையாள, 'மை' வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தயாராகும் இடம்: மைசூர் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் நிறுவனத்தை கர்நாடக அரசு நடத்தி வருகிறது. இந்த நிறுவனம்தான் தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, அடையாள குறியீடு இட மையைத் தயாரிக்கிறது. தற்போது, வங்கிகளில் பயன்படுத்த தினமும் 30 ஆயிரம் பாட்டில்கள் வரை, ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்து வருகிறது. ஒரு பாட்டில் மையை, 500 பேருக்கு அடையாளம் இட பயன்படுத்த முடியும்.

