PUBLISHED ON : அக் 09, 2017

மொபைலில் படம் பிடித்துக்கொள்வது என்பது இன்று எளிமையாகி இருக்கிறது. அதிலும் செல்ஃபி மோகம் உலக மக்களிடையே அதிகரித்து வருகிறது. மாடியின் விளிம்பில் நின்று, மலைஉச்சியில் இருந்து, ரயில் வரும் தண்டவாளத்தில் நின்று என செல்ஃபி பிரியர்கள் தாங்கள் எடுக்க விரும்பும் படங்களை ஆபத்தான இடங்களில் வித்தியாசமான கோணத்தில் எடுக்கவே விரும்புகின்றனர். இப்படி எடுக்கப்படும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பாராட்டுகளையும், விருப்பக்குறிகளையும் பெற நினைக்கும் அவர்கள், அதிக அளவில் செல்ஃபி மோகத்தில் சுற்றுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான செல்ஃபி மோகத்தால், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், நடப்பு ஆண்டில் மட்டும் இதுரை 107 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 76 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்தவை. நமது அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டிய தருணம் இது. பல நாடுகளில் 'இங்கே செல்ஃபி எடுக்க அனுமதி இல்லை' என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

