
முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளது விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்தும் பிரிட்டனைச் சேர்ந்த 'தாம்சன் & மார்கன்' (Thompson & Morgan) என்ற நிறுவனம். பல ஆண்டு ஆய்வு முயற்சிகளுக்குப் பின்னால் இந்த ஒட்டுச்செடியை சோதனை முறையில் மட்டுமன்றி, வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக்கி, பொதுமக்களுக்கும் விற்பனை செய்கிறது.
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளித் தாவரங்களை ஒன்றாக ஒட்டுவதன் மூலம் உருவாகும் தாவரம் உருளைத் தக்காளி (Pomato -- பொேமாட்டோ) எனப்படும். இதில் தக்காளி தண்டுப்பகுதியிலும் உருளைக்கிழங்கு வேர்ப்பகுதியிலும் ஒரே தாவரத்தில் கிடைக்கும்.
'சொலானாசியே' (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்த இரண்டு செடிகளின் ஒரே அளவிலான தண்டுகளை ஒட்டிவைத்து (Grafting -- கிராஃப்டிங்), கட்டப்படுகிறது. தக்காளிச்செடியின் வேர்களையும் உருளைக்கிழங்கின் தண்டுப்பகுதியையும் நீக்கிவிட்டு, மண்ணில் நடும் மிக எளியமுறையில் இந்த உருளைத்தக்காளிச் செடி உருவாக்கப்படுகிறது. 12 வாரங்களில் அறுவடைக்குத் தயாராகும் இந்தச் செடியில், 500 சுவையான தக்காளிகளும், அதிக உருளைக்கிழங்குகளும் கிடைக்கின்றன. மரபணு மாற்றம் செய்யப்படாத இயற்கையான முறையில் இது விளைவிக்கப்படுகிறது.
இந்தச் செடி 'டாம் டேட்டொ' (Tom Tato) என்னும் பெயரில், 14 அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் செடியை வீட்டிற்குள்ளும், வெளியிலும் வளர்க்கலாமென்பதால், மக்கள் அதிகம் விரும்பி வாங்கிச்சென்று வளர்க்கிறார்கள். பிரிட்டனின் இந்த முறையை நியூசிலாந்து விவசாயிகளும் பின்பற்றி 'பொட்டேட்ேடா டாம்' (Potato Tom) என்னும் பெயரில் இச்செடியை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
- அ.லோகமாதேவி

