தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கஜனி முகமது தோற்றவரா? ஜெயித்தவரா?

கஜனி முகமது தோற்றவரா? ஜெயித்தவரா?

கஜனி முகமது தோற்றவரா? ஜெயித்தவரா?


PUBLISHED ON : அக் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக அயராத முயற்சிக்கு கஜனி முகம்மதுவின் படையெடுப்பை உதாரணமாகச் சொல்வர். ஆனால் தோல்வியால் தளராத முயற்சிக்கு இது சரியான எடுத்துக்காட்டில்லை. ஆம், கஜினி படையெடுத்து வந்த 17 முறையுமே அவர் வெற்றியடைந்தார். ஒவ்வொரு முறையும் பெருஞ்செல்வத்தோடே தன் நாட்டிற்குத் திரும்பினார்.

சாஹி எனும் நாடு இன்றைய பாகிஸ்தான் பகுதியில் இருந்தது. அந்நாட்டை ஆண்டு வந்த ஜெயபாலரின் மீதுதான் கஜினி முகமதுவின் முதல் படையெடுப்பு நடந்தது (கி.பி.1001). ஜெயபாலரை போரில் வென்று அடிமையாகப் பிடித்துச் சென்ற கஜினி முகமது, பின் 25 ஆயிரம் தினார் பிணைத் தொகை பெற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தார்.

தோல்வியால் அவமானமடைந்த ஜெயபாலர் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அவரது மகன் ஆனந்தபாலர் பட்டத்திற்கு வந்தார். இவரது தலைமையில் இந்து மன்னர்களின் கூட்டுப்படை, அடுத்த முறை கஜினியை எதிர்கொண்டது. மதுரா, கன்னோஜ், குவாலியர், காஷ்மீர் என பல நாட்டு மன்னர்களும் இணைந்து திரட்டிய இப்படை 20,000த்திற்கும் மேற்பட்ட வீரர்களோடு வலுவாக இருந்தது.

ஆனால் தன்னை விடக் கூடுதல் படைபலத்தோடு இருந்த எதிரிகளையும் கஜினி வென்று மீண்டும் பெருஞ்செல்வத்தோடு தன் நாட்டிற்கு திரும்பினார். இந்த அதிசயமான வெற்றிக்குப் பின்னர் இந்திய மன்னர்கள் யாருக்கும் கஜனியை எதிர்க்கும் தன்னம்பிக்கை பிறக்கவே இல்லை. கஜினியின் படை வருவதாகத் தெரிந்தாலே மன்னர்கள் கோட்டையை கைவிட்டுவிட்டு ஓடிவிடுவது சகஜமானது.

கஜனி என்றதுமே நம் நினைவுக்கு வரும் சோமநாதபுர படையெடுப்பிலும் (கி.பி. 1025) இதுவே நடந்தது. ராஜா பீமதேவனும், அவரது அதிகாரிகளும் கை விட்டுச்சென்ற சோமநாதபுரத்தை, எளிதாகக் கைப்பற்றிக் கொள்ளையிட்டுச் சென்றார் கஜனி. வென்ற நாடுகளில் எல்லாம் தன் ஆட்சியை நிறுவ இவர் ஆர்வம் காட்டவில்லை. அந்நாடுகளின் செல்வத்தை கொள்ளையடிப்பதோடு, மக்களை வாள் முனையில் மதம் மாற்றுவதையும் தனது கடமையாக எண்ணிச் செய்து வந்தார்.

எப்போதும் கொள்ளை, படையெடுப்பு போன்ற செயல்களோடே தொடர்பு படுத்திப் பார்க்கும் கஜனிக்குள் கலையையும், அறிவையும் மதிக்கும் பண்பும் இருந்தது என்பது 'பிர்தௌசி', 'அல்பரூணி' போன்ற அறிஞர்களுக்கு தன் அரசவையில் மதிப்பளித்திருந்ததில் இருந்து தெரியவருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us