PUBLISHED ON : ஜன 25, 2016

ஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எண்ணால் வகுபடாத எண்ணுக்கு ஆங்கிலத்தில் 'பிரைம் நம்பர்ஸ்' (Prime numbers) என்று பெயர். இதனைத் தமிழில் 'பகா எண்கள்' எனச் சொல்கிறோம்.
ஒன்றிலிருந்து பட்டியல் போட்டால் பகா எண்களின் பட்டியல் 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29... என்று நீண்டுகொண்டே போகும். எண்கள் பெரிதாகப் பெரிதாக… பகா எண்களின் எண்ணிக்கை குறையும். எண்கள் பெரிதாகும்போது மற்ற எண்களால் வகுபடக் கூடிய சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்பதே இதற்குக் காரணம்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பகா எண்களிலேயே மிகப் பெரிய எண் என்னவாக இருக்கும்? அந்த ஒற்றை எண்ணை எழுதுவதற்கே நமக்கு ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட தாள்கள் வேண்டும். இதில் 22 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரத்து 618 இலக்கங்கள் உள்ளன. இந்த பிரமாண்டமான எண்ணை அமெரிக்காவின், மத்திய மிஸ்ஸௌரி பல்கலைக்கழகத்தில் (University of Central Missouri) இருக்கும் ஒரு கணினி கண்டுபிடித்திருக்கிறது.
அந்த எண்ணை சுருக்கமாக அடுக்குகளில் சொல்கிறோம். 274,207,281-1 என்பதுதான் அந்த எண். அதாவது, 2 பவர் 74,207,281 என்ற எண்ணில் இருந்து ஒன்றைக் கழித்தால் வரும் எண்தான் மிகப் பெரிய பகா எண்.
