தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இது வெள்ளை உப்பு அல்ல!

இது வெள்ளை உப்பு அல்ல!

இது வெள்ளை உப்பு அல்ல!


PUBLISHED ON : டிச 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். நம்முடைய சமையலில் நறுமணப் பொருட்கள், மிளகாய் என எவற்றைச் சேர்த்தாலும், உப்பு இல்லை என்றால், உணவு சுவையாகவே இருக்காது.

உணவுப் பொருட்களில் உப்பைச் சேர்க்கும்பொழுது, அந்த உப்பானது உணவுப் பொருட்களில் இருக்கின்ற மூலக்கூறுகளை காற்றில் பரவச் செய்கின்றன.இதன் காரணமாக உணவின் மணம் நம் நாசியை வந்தடைகிறது. உப்பில் பல வகைகள் உண்டு. சமீபகாலமாக சந்தையில் பிரபலமாகி வரும் ஓர் உப்பு வகையைப் பற்றி பார்ப்போம்.

ஹிமாலயன் பிங்க் சால்ட்

உலகத்தில் காணப்படும் உப்பு வகைகளிலேயே மிகவும் தூய்மையான உப்பு, இந்த ஹிமாலயன் பிங்க் சால்ட் தான். இமாலய மலைப்பகுதிகளில் உள்ள கேவ்ரா சால்ட் மைன் என்கிற சுரங்கத்தில் இந்த உப்பு, கைகளால் எடுக்கப்படுகிறது.இந்த வகை உப்பானது பார்ப்பதற்கு பழுப்பான வெள்ளை நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். எண்ணற்ற தாதுச் சத்துகளைக் கொண்டுள்ள இந்த உப்பு, அழகு சிகிச்சைகளுக்கும், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us