உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
ஆகாயத்தில் கரங்கள் வீசி
அழகு நிலா நடக்குது
அகிலத்து உயிர்கள் எல்லாம்
அண்ணாந்து வியக்குது
பகலில் அதிக பணிச்சுமைபோல்
பளிங்கு முகம் மறைக்குது
இரவு முழுக்க ஓடிஓடி
ஒளியை வாரி இறைக்குது
சிலநாட்கள் முகம் சுருங்கி
சின்னதாகத் திரியுது
அதிலும் கூட ஒருநாளில்
அருவமாகிப் போகுது
மேகக் கதவில் ஒளிந்தொளிந்து
கண்ணா மூச்சு ஆடுது
யாரும் நெருங்க முடியாமல்
விண்மீனால் தடுக்குது
ஆறு குளம் கிணற்றிலே
இறங்கி நெருங்கி வருகுது
அன்புக் கரம் நீட்டினாலோ
கலங்கி தளும்பி ஓடுது
