PUBLISHED ON : டிச 26, 2016

வாழ்ந்த காலம்: 27.12.1571 - 15.11.1630
பிறந்த ஊர்: வைல் டர் ஸ்டாட், ஜெர்மனி
சாதனை: கோள்களின் சுற்று விதிகளைக் கணித்தது
* கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளைக் கண்டறிந்தார்.
* நட்சத்திரங்களின் தொலைவைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார்.
* கிறிஸ்து பிறந்த ஆண்டை கணக்கிட்டுக் கூறினார்.
கெப்ளர் சிறுவனாக இருந்தபோது, அவரது தந்தை ஹென்ரிச், வான்வெளியைப் பற்றியும், சந்திர கிரகணம் குறித்தும் பல வியப்பான தகவல்களைக் கூறுவார்.
தத்துவம், இறையியல் கற்ற பிறகு, இறையியலாளராகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் கெப்ளரின் ஆசை. ஆனால், கணிதம், வானியலில் அதிக ஆர்வம் இருந்ததால், நட்சத்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தார்.
நட்சத்திரங்களை எண்ணுவது கஷ்டமான கணக்காக இருந்தாலும், ஒரு கணித மேதையான கெப்ளருக்கு இது பிடித்திருந்தது. பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு, 'வானில் கோள்கள் அசைகின்றன. ஆனால், அவை ஒரு குறிப்பிட்ட விதியின்படி சீராக நகர்கின்றன' என்பதைக் கண்டுபிடித்தார்.
தொலைநோக்கியில் ஒளி எவ்வாறு ஊடுருவுகிறது என்பதை ஆய்வுசெய்து, மாதிரி தொலைநோக்கியை உருவாக்கினார். அதை ஆதாரமாக வைத்துத்தான், கலீலியோ தன் முதல் தொலைநோக்கியை உருவாக்கினார்.
கெப்ளர், கோள் இயக்கம் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, மூன்று விதிகளைக் கண்டறிந்தார். முதல் இரண்டு விதிகள், ஒற்றைக் கோளின் இயக்கம் குறித்து இருந்தன. மூன்றாவது விதி, இரண்டு கோள்களின் சுற்றுப்பாதைகளை ஒப்பீடு செய்வதாக இருந்தது.
வானியலில் தொடர்பாக, தான் கண்டறிந்த விஷயங்களை, 'மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்' என்ற பெயரில், புத்தகமாக எழுதினார் கெப்ளர். ஸ்ட்ரோநோமியா நோவா, ஹார்மோனிஸ் முன்டி ஆகிய நூல்களில், கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக இவர் கூறிய கருத்துகளால், பெரும்புகழ் பெற்றார்.