தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/காஜா ஆந்திரத்தின் ராஜா!

காஜா ஆந்திரத்தின் ராஜா!

காஜா ஆந்திரத்தின் ராஜா!


PUBLISHED ON : டிச 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆந்திர மாநிலத்தின் தனித்தன்மை வாய்ந்த இனிப்பு வகைகளில் ஒன்று காஜா. மைதா மாவு, சர்க்கரை, நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மாவுப்பண்டம், ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகளான ராஜமுந்திரி மற்றும் கோனசீமா ஆகிய பகுதிகளில் பிரசித்தி பெற்றது.

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோவிலில், இந்த காஜா பிரசாதப் பொருளாகப் பார்க்கப்படுகிறது.

காஜா என்கிற இனிப்பின் தாயகம் பீகார் என்று வரலாறு தெரிவிக்கிறது. குறிப்பாக, கௌதம புத்தர் இந்த இனிப்புக்கு காஜா என்று பெயர் வைத்ததாகவும் செய்திகள் உள்ளன. ஆனால், ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரையில் காக்கிநாடா மற்றும் தபேஸ்வரம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்படும் காஜா மிகச் சிறந்தவையாக அறியப்படுகிறது.

காக்கிநாடாவில் தயாராகும் காஜா, கொட்டம் காஜா என்று அழைக்கப்படுகிறது.1891-ஆம் ஆண்டு சிட்டிபேடி கொட்டையா என்பவர், காக்கிநாடாவிற்கு இடம்பெயர்ந்திருக்கிறார். பிறகு, அங்கேயே ஓர் இனிப்பகத்தையும் ஆரம்பித்த இவர், முதன் முதலில் தனது இனிப்பகத்தில் இந்த காஜாவைத் தயாரித்து விற்பனை செய்தார். இந்தக் கடை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரசித்திபெற்று, கொட்டையா ஸ்வீட்ஸ் என்கிற அவரது அந்த இனிப்பகம் தற்போது விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. காக்கிநாடா மற்றும் ராஜமுந்திரியில் இதற்கு நிறைய கிளைகளும் இருக்கின்றன.

கொட்டம் என்றால், கல் என்று அர்த்தம். உருளை வடிவத்தில் கல் போன்று இருப்பதால், இந்த இனிப்பிற்கு கொட்டம் காஜா என்று பெயர் வந்தது. மைதாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மாவாக்க வேண்டும். பின்னர், இதை உருளை வடிவில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரிக்க வேண்டும். பிறகு இவற்றை சர்க்கரைப் பாகில் ஊறவைத்தால் கொட்டம் காஜா தயார். வெளியில் பார்ப்பதற்கு உலர்வாகத் தெரியும் இந்தப் பண்டத்தைக் கடித்தால் சர்க்கரைப் பாகின் இனிப்பை ருசிக்க முடியும். கோனசீமா என்பது ஆந்திரத்தில் இருக்கும் தீவுகளின் தொகுப்பு.

இங்குள்ள சிறுநகரம்தான் தபேஸ்வரம். இங்கும் காஜா தயாரிக்கப்படுகிறது.ஆனால், இங்கு தயாரிக்கப்படும் காஜா, கொட்டம் காஜாவிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். அதாவது இங்கு தயாரிக்கப்படும் காஜாவின் உள்ளே நிறைய அடுக்குகள் இருக்கும். இனிப்பில் ஊறவைக்கப்பட்ட இந்தக் காஜாக்கள் நாவூறும் சுவை கொண்டதாக இருக்கின்றன. அதேபோல, மடத்த காஜா என்ற மற்றொரு வகை இனிப்பு ஒன்றும் இருக்கிறது. இது, மற்ற காஜாக்களைவிட சற்று உலர்வாக இருக்கும்.

- கொக்கோ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us