தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியாவின் நில அமைப்பு

இந்தியாவின் நில அமைப்பு

இந்தியாவின் நில அமைப்பு


PUBLISHED ON : ஜூன் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியா, மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. புவியியல் அடிப்படையில் இது ஒரு தீபகற்பம் (Peninsular - பெனின்சூலர்). நில அமைப்பின்படி, ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

• வடக்கு மலைகள்

• வடபெரும் சமவெளிகள்

• தீபகற்பப் பீடபூமி

• கடற்கரைச் சமவெளிகள்

• தீவுகள்

வடக்கு மலைகள்

இமயமலைத் தொடர் பகுதி. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே இமயமலை பரவியுள்ளது.

வடபெரும் சமவெளிகள்

இமயமலையின் தெற்கே அமைந்துள்ளது. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளின் படிவுகளால் உருவான நிலப்பரப்பு. ராஜஸ்தான் சமவெளி, பஞ்சாப் -ஹரியாணா சமவெளி, கங்கைச் சமவெளி, பிரம்மபுத்திரா சமவெளி என நான்கு பிரிவுகளாக இவற்றைப் பிரிக்கலாம்.

தீபகற்பப் பீடபூமி

வட இந்திய சமவெளிக்குத் தெற்கே அமைந்துள்ளது. முக்கோண வடிவம் கொண்டது. இதைச் சுற்றி, வடக்கே ஆரவல்லி, விந்திய, சாத்பூரா, ராஜ்மகால் மலைத் தொடர்களும்; மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலைகளும்; கிழக்கே, கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் அமைந்துள்ளன.

இதன் வட பகுதி மத்திய உயர்நிலங்கள் என்றும், தென் பகுதி தக்காண பீடபூமி எனவும் குறிப்பிடப்படுகிறது. தக்காண பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது.

கடற்கரைச் சமவெளிகள்

• கிழக்கு கடலோரச் சமவெளி

கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடாவுக்கு இடையே பரவியுள்ள நிலப்பரப்பு. தமிழ்நாட்டில் இருந்து வடக்கில் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் வரையும் அகன்றுள்ளது.

• மேற்கு கடற்கரைச் சமவெளி

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அரபிக் கடலுக்கு இடையே உள்ளது. இது மேற்கில் உள்ள குஜராத் கட்ச் வளைகுடா முதல் தெற்கே கன்னியாகுமரி வரை நீண்டிருக்கிறது.

தீவுகள்

அந்தமான், நிகோபார், லட்சத் தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள்.

அந்தமான், நிகோபார் தீவுகள் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன. இவை 572 சிறியதும், பெரியதுமான தீவுகளை உள்ளடக்கியவை. இவற்றில் 38 தீவுகள் மட்டுமே மனிதர்கள் வாழும் இடங்களாக உள்ளன.

லட்சத்தீவுகள் அரபிக் கடலில் அமைந்துள்ளன. இங்குள்ள 27 தீவுக்கூட்டங்களில், 11 தீவுகளில் மட்டும் மனிதர்கள் வசிக்கின்றனர்.

தார் பாலைவனம்

இந்தியாவின் மேற்குப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. பாகிஸ்தானிலும் பரவியுள்ள இப்பாலைவனம், அங்கு 'சோலிஸ்தான்' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாலைவனத்தின் 61 சதவீதப் பகுதி ராஜஸ்தானிலேயே உள்ளது.

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us