தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தாவரத்தின் ஆதாரம்

தாவரத்தின் ஆதாரம்

தாவரத்தின் ஆதாரம்


PUBLISHED ON : ஜூன் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவரங்களில், தண்டுத் தொகுதி, வேர்த் தொகுதி என்ற இரண்டு முக்கியத் தொகுதிகள் உள்ளன. மண்ணுக்குள் மறைந்திருந்தாலும், தாவர வளர்ச்சிக்கு அடிப்படையாக உதவுபவை வேர்த் தொகுதிகள். வேர்த் தொகுதியில், ஆணி வேர், சல்லி வேர், வேர்த்தூவி போன்ற பாகங்கள் உள்ளன.



வேர் (Root - ரூட்)


பச்சையம் இல்லாதது. நேர் புவிநாட்டமும், (Positively Geotropic - பாசிட்டிவ்லி ஜியோடிராபிக்), எதிர் ஒளிநாட்டமும் (Negatively Phototropic - நெகடிவ்லி போட்டோடிராபிக்) உடைய தாவர உறுப்பு. பொதுவாக, தரைக்குக் கீழே வளரும்.தரைக்கு மேலே வளர்பவையும் உள்ளன. (உதாரணம்: அலையாத்தி மரங்கள், அவிசென்னியா மரினா (Avicennia marina)

வேர் வகைப்பாடு

* தரைக்குக் கீழ் வேர் வளரும் தாவரங்கள்

* தரைக்கு மேல் வேர் வளரும் தாவரங்கள்

வேர்களின் நான்கு முக்கியப் பணிகள்

* தாவரத்தை நிலத்துடன் பிணைத்தல்

* நிலத்தில் இருந்து நீரையும், கனிமங்களையும் உறிஞ்சுதல்

* உறிஞ்சிய நீரையும் கனிமங்களையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல்

* உணவைச் சேமித்தல்

வேர்களின் முக்கிய வகைகள்

* ஆணி வேர்த் தொகுதி (Tap Root System - டேப் ரூட் சிஸ்டம்)

இருவித்திலைத் தாவரங்களின் விதையில் இருந்து வளரும் முளை வேர், நிலத்திற்குள் நேராகக் கீழ்நோக்கிச் செல்லும். வலுவான ஆணி வேரில் இருந்து பக்க வேர்கள் வளரும்.

* சல்லி வேர்கள் (Fibrous Root System - ஃபைபரஸ் ரூட் சிஸ்டம்)

ஒரு வித்திலைத் தாவரங்களில் ஏறத்தாழ ஒரே அளவு நீளத்துடன், தண்டின் நுனியில் இருந்து கொத்தாக வளர்பவை. நார் வேர்கள் என்றும் இவை குறிப்பிடப்படுகின்றன.

Recall

ஆணி வேர், சல்லி வேர் உடைய தாவரங்களை எழுதுக

1. .........................

2. .........................

3. .........................

4. .........................

- அ.லோகமாதேவி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us