தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அயல்மொழி அறிவோம்!: 'ஐ', 'ஓ' : இவ்வளவு சுலபமா ஜப்பானிய மொழி?

அயல்மொழி அறிவோம்!: 'ஐ', 'ஓ' : இவ்வளவு சுலபமா ஜப்பானிய மொழி?

அயல்மொழி அறிவோம்!: 'ஐ', 'ஓ' : இவ்வளவு சுலபமா ஜப்பானிய மொழி?


PUBLISHED ON : ஏப் 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மாங்கா காமிக்ஸ்' உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சு இருக்குமே?. ஜப்பான் நாட்டின் கொடைதான் 'மாங்கா காமிக்ஸ்'. சென்னையில் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள மாணவர்கள் ஆர்வமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அனிமேஷன் என்கிறார் அருண். இவர் சென்னையில் ஜப்பானிய மொழியைச் சொல்லித்தரும் 'ஜாப்பனீஸ் லாங்குவேஜ் ஸ்கூலை' நடத்தி வருகிறார். அவருடன் பேசினோம்:

ஜப்பானிய மொழி, கற்றுக்கொள்ள எளிமையானதா?

தமிழ் மொழிக்கும், ஜப்பானிய மொழிக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. உதாரணமாக, நாம் எங்கெல்லாம் 'ஐ' என்பதைப் பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் ஜப்பானிய மொழியில் 'ஓ' வைப் பயன்படுத்த வேண்டும். தமிழ் இலக்கணத்திலிருந்து ஜப்பானிய மொழி இலக்கணம் நிறைய விஷயங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறது. இந்திய மொழிகள் பேசுபவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது மிகவும் சுலபம்.

தமிழ் வழியாக சொல்லித் தரப்படுகிறதா?

ஆமாம், தமிழ் மட்டுமல்ல; அவரவர் தாய்மொழி வழியாகவும் சொல்லித் தரப்படுகிறது. ஆங்கிலம் மூலம் ஜப்பான் மொழி கற்றுக்கொள்வதைக் கடைசி ஆப்ஷனாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில மொழி மூலம் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொண்டால், புரிந்துகொள்வதிலும், பேசுவதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதனால் இந்தியர்கள், இந்திய மொழி மூலமாகவே கற்றுக்கொள்வது நல்லது.

இதில் எத்தனை நிலைகள் உள்ளன?

மொத்தம் ஐந்து நிலைகள் உள்ளன. முதல் நிலை ஆரம்பநிலை. அடுத்தடுத்த நிலைகளில் மொழியின் இலக்கணம், பேச்சுமொழி ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளலாம். மூன்றாவது நிலையை முடித்துவிட்டால் வேலை நிச்சயம். 4 வது நிலை முடித்துவிட்டால் கூடுதல் சிறப்பு. ஜப்பான் இலக்கியம் மீது ஆர்வமுள்ளவர்கள், ஐந்தாவது நிலையை முடிக்கலாம். வேலைதான் முக்கியம் என்றால் 3 நிலைகள் போதுமானது.

எத்தனை மாதங்களில் கற்றுக்கொள்ள முடியும்?

ஆறு மாதத்திலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்குள் 3 நிலைகளை முடித்துவிடலாம். ஆர்வம்தான் முக்கியம். ஆர்வமிருந்தால், எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் பள்ளியில் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்?

மொழியைப் பாடமாகச் சொல்லித் தருவதில்லை. மொழியை மொழியாகச் சொல்லிக் கொடுக்கிறோம். குழு குழுவாகக் கற்பிக்கப்படுகிறது. மேலும் யாருக்காவது புரியவில்லை என்றால், அவர்களுக்குப் புரியும் விதத்தில் தனியே சொல்லித் தருகிறோம். சுருக்கமாக, எந்தவித கால நிர்ணயமும் இல்லாமல் மொழியை கற்றுக்கொள்ள உதவுகிறோம்.

- தொடர்புகொள்ள -

ஜாப்பனீஸ் லேங்குவேஜ் ஸ்கூல், டிரஸ்ட் டோக்கியோ, 3பி. தேவ் ரீஜென்சி, 11, முதல் பிரதான சாலை, காந்தி நகர், அடையாறு, சென்னை - 20.

தொலைபேசி: 9940553312

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us