தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இடது இனிது!

இடது இனிது!

இடது இனிது!


PUBLISHED ON : ஆக 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள் தினம் ஆகஸ்ட் 13

இடக் கையால் பேனாவைப் பிடித்து சரளமாக எழுதுகிற சிலரை நாம் வித்தியாசமாகப் பார்த்திருப்போம். இடக்கைப் பழக்கம் ஏன் ஏற்படுகிறது?!

மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்தும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இடப்பக்க மூளை அதிகச் செயல்பாட்டில் இருப்பதால்தான் வலக்கைப் பழக்கம் ஏற்படுகிறது. மிகச் சிலருக்கு இடப்பக்க மூளையைக் காட்டிலும் வலப்பக்க மூளையின் செயல்பாடு சற்று அதிகமாக இருக்கும். அதன் காரணமாக இடக்கைப் பழக்கம் ஏற்படுகிறது.

சிலர் இரு கைகளையும் பயன்படுத்தி வேலைகளைச் செய்வார்கள். சில வேலைகளை வலக்கையிலும், சில வேலைகளை இடக்கையிலும் செய்கிற 'இரு கைப் பழக்கம்' (Mixed Handedness) உள்ளவர்களும் இருக்கிறார்கள்.

இரு கைகளையும் சமமான வேகத்துடன் பயன்படுத்துகிறவர்களை 'ஆம்பிடெக்ஸ்டர்' (Ambitexter) என்று அழைப்பார்கள். மகாத்மா காந்தி இரு கைகளாலும் சரளமாக எழுதக்கூடியவர்.

மனித மூளை வலது பெரு மூளை, இடது பெரு மூளை என இரு பகுதிகளைக் கொண்டது. இவை 'கார்பஸ் கலோசம்' (Corpus Callosum) என்ற நரம்புக் கற்றையால் இணைக்கப்பட்டு உள்ளன. இடக்கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு இடது மூளையே பிரதானமாக (Dominant) உள்ளது.

இடக்கைப் பழக்கம் பற்றிய சில ஆய்வுத் தகவல்கள்

லண்டனைச் சேர்ந்த சர் தாமஸ் பிரவுன் (Sir Thomas Browne) 1648ல் எழுதிய 'வல்கர் எரர்ஸ்' (Vulgar Errors) என்ற நூலில் முதன்முதலாக இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது என அறிவித்தார்.

மெக்ஹேல் (Mchale) என்பவர் நடத்திய ஆய்வின்படி வலது கைப் பழக்கம் உடையவரின் மூளையின் சிறு கிளைகள் (Occipital Horns), பக்கவாட்டு ரத்தக் குழாய்கள் ஆகியவை மூளையின் இடப்பக்கத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் ஐந்து மடங்கு நீளமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இடக்கைப் பழக்கம் உடையவர்களுக்கு இந்த அமைப்பு நேர்மாறாக இருக்கிறதாம்!

இடக்கைப் பழக்கமுள்ள சில பிரபலங்கள்

உலகப் புகழ் ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ

மாவீரன் அலெக்ஸாண்டர்

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்

விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,

பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா

அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஒபாமா, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, மகாத்மா காந்தி

தத்துவ மேதைகள் அரிஸ்டாட்டில், நீட்சே

எழுத்தாளர் காஃப்கா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

உலக மக்களில் இடக்கைப் பழக்கம் உடையவர்கள் அதில்

52% ஆண்கள்

48% பெண்கள்

140 சராசரி அறிவுத் திறன் (Intelligence Quotient - IQ)

100 வலக்கைப் பழக்கம் உள்ளவர்களின் சராசரி அறிவுத் திறன் 100 மட்டுமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us