தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தடையை உடைப்போம்... சாதனை படைப்போம்...

தடையை உடைப்போம்... சாதனை படைப்போம்...

தடையை உடைப்போம்... சாதனை படைப்போம்...


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பக்தி சர்மா (Bakthi Sharma): ஆசியாவில் இருந்துபோய், அண்டார்ட்டிகாவின் ஐஸ் கட்டித் தண்ணீரில் நீந்தியவர். 'ஒரு டிகிரி சென்டிகிரேடு குளிர் நீரில் சாதனை படைத்த .லகின் இளம் பெண்' என்கிற பட்டத்தை ஏந்தியவர். ராஜஸ்தானை சேர்ந்த 26 வயது இரும்புப் பெண்.

அருணிமா சின்ஹா (Arunima Sinha): ரயிலில் போனபோது கொள்ளையர் தாக்குதலால் ஒரு காலை இழந்தார். கால் போனால் என்ன, நம்பிக்கை இருக்கிறதே என்று எழுந்தார். இமயமலைச் சிகரமான எவரெஸட்டையே அடைந்தார். ஜார்கண்ட் மாநிலத்துக்குப் பெருமை தந்தார்.

மேரி கோம் (Mary Kom): இரட்டைக் குழந்தைகள் பெற்றவராக இருந்தும், குத்துச் சண்டை விளையாட்டை விட்டுவிடாத வீராங்கனை. ஒலிம்பிக் வரை சென்று, இந்தியாவுக்கு வௌ்ளிப் பதக்கம் வென்று தந்தது. இவருடைய சாதனை. மணிப்பூர் மாநிலத்தின் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பெண்மணி.

ஹர்ஷினி (Harshini): ஆண்களின் ராஜ்ஜியமான தீயணைப்புத் துறைக்குள் புகுந்த இந்தியாவின் முதல் பெண். தடைகளை உடைப்பதும், சரித்திரம் படைப்பதும் இவருக்கு தொழில் அல்ல, விளையாட்டு.

சாய்னா நெய்வால் (Saina Nehwal): ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண். அதே விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல்வரும் இவர்தான். ஹரியானா மாநிலத்தின் பெருமிதம் எனறு இவரைச் சொல்வது. சரிதானே?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us