sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/கடலைக் காப்போம்!

கடலைக் காப்போம்!

கடலைக் காப்போம்!


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரியக் குடும்பத்தில் திரவ நிலையைப் புறப்பரப்பில் கொண்டுள்ள ஒரே கோள் பூமி. சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதலில் இருந்து பாதுகாப்பு என பூமியைப் பாதுகாப்பதில் ஆதாரமாகக் கடல் விளங்குகிறது.

கழிவு நீர் கடலில் கலப்பது, எண்ணெய்க் கசிவு, கடலில் எறியப்படும் பொருட்கள் போன்ற காரணங்களால் கடல் நீர் மாசுபட்டு கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

பெருங்கடல்களின் சிறிய பகுதிகள் கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

உலக பெருங்கடல் தினம் ஜூன் 8

கடல், கடல்சார் உயிரினங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற புவி கருத்தரங்கில் 'உலக கடல் தினம்' கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. இதை ஐக்கிய நாடுகள் அமைப்பு 2008ஆம் ஆண்டில் முறைப்படி அங்கீகரித்தது.

சூரை மீன் (Tuna Fish) உலகில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் மீன் வகை

25 பில்லியன் டாலர்கள் வளர்ந்துவரும் நாடுகளில் ஒரு வருடத்தில் நடக்கிற மீன் வியாபாரம்

கடல்வாழ் உயிரினங்களில் சமநிலையை ஏற்படுத்துவதில் சுறா மீன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், ஓர் ஆண்டில் 7 கோடிக்கும் மேலான சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன.

52% கடல் சார் தொழில் செய்யும் மீனவர்கள்

82 நாடுகள்

102 பில்லியன் டாலர் உலக அளவில் ஓர் ஆண்டில் நடக்கிற மீன் மற்றும் மீன் பொருள் வியாபாரம்

35 மில்லியன் / ஆண்டுக்கு உலக அளவில் கடல் சார்ந்து கிடைக்கிற வேலைவாய்ப்புகள்

கடல் நீரில் மிக அதிக அளவு கரைந்துள்ள திடப்பொருள் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு). கடல் நீரில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகளும் மேலும் பல தனிமங்களும் உள்ளன. பவளப்பாறைகள், பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன.

கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?

சூரிய வெப்பம் காரணமாக கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது. கடல் நீர் ஆவியாகும் போது உப்பு தங்கிவிடுகிறது. உப்பு இவ்விதம் தங்கிவிடுவதால் மழை நீர் உப்பு கரிப்பது இல்லை. உலகில் உள்ள எல்லா கடல்களிலும் உப்புத் தன்மை ஒரே அளவில் இருக்காது. நீரின் செறிவைப் பொறுத்து மாறுபடும்.

70% பூமியில் தண்ணீரால் சூழப்பட்டுள்ள பரப்பு

97% பூமியில் உள்ள மொத்த தண்ணீரின் அளவில் கடல் நீர்

70% கடல் மூலமாக நமக்கு சுவாசிக்கக் கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு.

100 கோடி கடலில் வாழும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை

3.5% ஒரு லிட்டர் கடல் நீரில் கலந்துள்ள உப்பின் எடை அளவு

பசிபிக் மற்றும் அட்லான்டிக் பெருங்கடல்களை புவிமையக் கோட்டை வைத்து வடக்கு தெற்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

பெருங்கடல்கள் - பரப்பளவு சராசரி ஆழம் ஆழமான பகுதி

பசிபிக் பெருங்கடல் - 165 மில்லியன் சதுர கி.மீ. - 15,215 அடி - மரியானா டிரென்ச் 36,198 அடி

அட்லான்டிக் பெருங்கடல் - 106 மில்லியன் சதுர கி.மீ. - 10,950 அடி - புவர்டோ ரிகோ டிரென்ச் 28,231 அடி

இந்தியப் பெருங்கடல் - 73.56 மில்லியன் சதுர கி.மீ. - 13,002 அடி - ஜாவா டிரென்ச் 25,344 அடி

அன்டார்டிக் பெருங்கடல் - 20.33 மில்லியன் சதுர கி.மீ. - 13,100- அடி - தெற்கு சாண்ட்விச் டிரென்ச் 23,737 அடி

ஆர்டிக் பெருங்கடல் - 14.6 மில்லியன் சதுர கி.மீ. - 3,953 அடி - யுரேசியா பேசின் 17,881 அடி

உலகின் மொத்தப்பரப்பளவு

30% பசிபிக் பெருங்கடல்

20% அட்லான்டிக் பெருங்கடல்

அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை இதெல்லாம் என்ன? கடலைக் குறிக்கிற தமிழ்ச் சொற்கள்தான் இவை!

அட... இதுதான் உலக குண்டுநீர் தினமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us