தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான் யார்?

நான் யார்?

நான் யார்?


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஒரு கதாசிரியருக்கு, மனிதநேயம் இருக்கவேண்டும்' என்று கதைகளில் சொல்லிய ஆங்கில எழுத்தாளர் நான். இங்கிலாந்தில் லான்ட்போர்ட் அடுத்துள்ள ஹாம்ப்ஷைர் எனும் இடத்தில் பிறந்தேன். என்னுடைய தந்தை ஆங்கில அரசாங்கக் கடற்படையில் குமாஸ்தாவாக இருந்தார். தாய் நடனக் கலைஞர். கடன் அதிகமாக இருந்ததால் குடும்பத்தை நடத்தக் கஷ்டப்பட்டார் தந்தை. அதனால், சிறுவயதிலேயே நானும் வேலைக்குச் செல்லவேண்டி இருந்தது. அந்த அனுபவத்தில் குழந்தைத் தொழிலாளியாக ஒரு சிறுவன் படும் கஷ்டங்களைச் சித்திரித்து 'ஆலிவர் டிவிஸ்ட்' புதினம் (Novel) எழுதினேன். அதன் பிறகுதான் இங்கிலாந்தில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தது. ஒரு எழுத்தாளனாக நான் வெற்றி பெற்றேன்!

எனது, 24ஆம் வயதில் கேத்ரின் தாம்ஸன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டேன். சகோதரி மேரியுடன் நாங்கள் லண்டனில் வசித்து வந்தோம். சகோதரி 1837ல் இறந்து போனார். அவருடைய மறைவு என்னைப் பெரிதும் பாதித்தது. அதைப் பல புதினங்களில் பதிவு செய்திருக்கிறேன்.

'மார்னிங் கிரானிக்கல்', 'மிர்ரர் ஆஃப் பார்லிமென்ட்' போன்ற செய்தித்தாள்களில் நிருபராக வேலை பார்த்தேன். 'பிக்விக் பேப்பர்ஸ்' என்ற பெயரில் 1837ல் இருந்து 1839 வரை நான் எழுதிய கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவைதான் எனக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தன.

எனது புத்தகங்கள் சிறுவர்களுக்கும் பிடிக்கும். பெரியவர்களுக்கும் பிடிக்கும். இதுபோல, சில எழுத்தாளர்கள் மட்டுமே எல்லாரையும் கவர்வதுபோல எழுதுகிறார்கள். அதில் நானும் ஒருவன்!

எனது புதினங்களில் மிகவும் பிரபலமானவை, 'டேல் ஆஃப் டூ சிட்டிஸ்' (இரு நகரங்களின் கதை), 'கிறிஸ்துமஸ் கரோல்' (கிறிஸ்துமஸ் பாட்டு) மற்றும் 'கிரேட் எக்ஸ்பெக்டேஷன்' (பெரும் எதிர்பார்ப்பு).

ஒரு பகுதியைப் படித்ததும் அடுத்த பகுதியைப் படிக்க வாசகனைத் தூண்ட வேண்டும். அதனால்தான், முழுப் புதினத்தையும் எழுதி, பத்திரிகைகளுக்கு அனுப்பாமல் பகுதி பகுதியாக அனுப்புவேன். அதாவது தொடர்கதை என்கிற வடிவத்தைக் கண்டுபிடித்ததே நான்தான் என்பார்கள்.

எனது புதினங்களில் வரும் கதாபாத்திரங்கள் பல, என் வாழ்வில் சந்தித்தவர்கள். புகழ்பெற்ற புதினமான 'ஆலிவர் டிவிஸ்ட்'டில் வரும் பாத்திரங்கள் எல்லாமே என் வீட்டின் அருகே இருந்தவர்கள்தான்!

'ஹவுஸ்ஹோல்டு வோர்ட்ஸ்' என்ற வாரப் பத்திரிகையை 38ஆவது வயதில் தொடங்கி, அதன் ஆசிரியராக இருந்தேன். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து 'ஆல் தி இயர் ரவுண்டு' எனும் பத்திரிகையைத் தொடங்கி, இறக்கும் வரை அதன் ஆசிரியராக இருந்தேன்.

லண்டனில் நான் வாழ்ந்த வீடு இன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குதான் ஆலிவர் டிவிஸ்ட், பிக்விக் பேப்பர்ஸ் போன்ற புதினங்கள் பிறந்தன!

சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens)

பிறப்பு: பிப்ரவரி 7, 1812

மறைவு: ஜூன் 9, 1870

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us