தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/காஷ்மீரில் நடமாடும் நூலகம்!

காஷ்மீரில் நடமாடும் நூலகம்!

காஷ்மீரில் நடமாடும் நூலகம்!


PUBLISHED ON : மே 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்நேரமும் பதற்றம், கலவரம், மோதல், துப்பாக்கிச்சூடு என்று செய்திகளில் அடிபடும் மாநிலம், காஷ்மீர். இதன் விளைவு, அங்குள்ள பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக, நூலக வசதி. மாணவர்களைக் கல்வியில் மட்டுமல்லாது, இதர துறைகளிலும் வாசிப்பை மேம்படுத்தினால் மட்டுமே, அவர்களை ஆக்கப்பூர்வமான இளைஞர்களாக வளர்த்தெடுக்க முடியும். இதனைப் பலரும் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், ஒரு பெண் மட்டும்தான், இதைச் சரிசெய்ய முயற்சி எடுத்துள்ளார். அவர் பெயர் ஃபர்கான் லத்தீஃப் கான்.

எப்படி இதைச் செய்தார்?

சமூக வலைத்தளங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்துகிறோம். இவர், புத்தகங்களை சேகரிக்க சமூக வலைத்தளத்தைத்தான் பெரிதும் நம்பினார். 'கார்வான்: அ ரோவிங் புக் பிராஜெக்ட்' (Karvaan: A Roving Book Project) என்ற அமைப்பை ஏற்படுத்தி, சமூக வலைத்தளம் மூலம், புத்தகங்களை பலரிடமிருந்து பெற்றார். அவற்றை முறையாக ஒழுங்குபடுத்தி, பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கிறார்.

காஷ்மீரில் இருக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை அறிமுகம் செய்வதோடு, படிப்பது குறித்த பயிலரங்குகளையும் ஏற்பாடு செய்து, வாசிப்பதை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

“நான், ஒரு நாளில் ஐந்து புத்தகங்களையேனும் படித்துவிடுவேன். எவ்வளவு வேலை இருந்தாலும், வாசிப்பதை நிறுத்துவதில்லை. நாம் படிக்க விரும்பும் புத்தகங்கள் எல்லாவற்றையும் நம்மால் வாங்கிவிட முடியாது. பலரிடமிருந்து பெறப்படும் புத்தகங்கள் மூலம் நூலகத்தை உருவாக்கி, அதைப் பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதே லட்சியம்” என்கிறார் இவர். மேலும், இவரது நூலகம், நடமாடும் நூலகம். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு, இவரது நூலகம் பயணம் செய்து, வாசிப்பு அனுபவத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும்.

மாணவர்களுக்கு புத்தகங்களைப் படிப்படியாக அறிமுகம் செய்வது தொடங்கிவிட்டது. புத்தகங்கள் மூலம், அவர்கள் வேறு ஓர் உலகைக் காணத் தொடங்கிவிட்டார்கள். அந்த உலகம் அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, புத்தகங்களைப் பற்றிய கலந்துரையாடலை தொடங்கியிருக்கிறார்.

இவருடைய வித்தியாசமான முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், 'டிஜிட்டல் எம்பவர்மென்ட் ஃபவுண்டேஷன்' இந்த அமைப்புக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us