PUBLISHED ON : மே 02, 2016

இரவுகளில் 'மினுக்' 'மினுக்'கென்று வெளிச்சம் உமிழ்ந்தபடி பறக்கின்ற மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். மின்மினிப் பூச்சிகளைப் போலவே, ஒளிரும் தன்மை கொண்ட தாவர இனங்களும் உண்டு.
'ஃபாக்ஸ்ஃபையர்' (Foxfire) என்ற பூஞ்சைத் தாவர இனம் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மை உடையது. மட்கிக்கொண்டிருக்கும் மரங்களில் வளரும் இந்தப் பூஞ்சைகள், எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், இனப்பெருக்கத்துக்காகப் பூச்சிகளைத் தங்கள் பக்கம் கவர்ந்து இழுக்கவும் ஒளியை உமிழ்கின்றன. இந்த ஒளி நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும். இந்தப் பூஞ்சைகளை 'ஃபேரி ஃபையர்' (Fairy Fire) என்றும் அழைக்கப்படுகிறது.
பூஞ்சைகளின் உடலில் இருக்கும் வெவ்வேறு வேதியியல் மூலக்கூறுகள் ஒன்று சேர்வதே ஒளி ஏற்படக் காரணம். இவற்றிலிருந்து வரும் ஒளிக்கு வெப்பம் தேவைப்படுவதில்லை. அதேபோல் அவை வெப்பத்தை வெளிவிடுவதும் இல்லை. இதனால், இந்த ஒளியை அறிவியல் வல்லுனர்கள் குளிர்ந்த ஒளி ('Cold Light' - கோல்ட் லைட்) என்று அழைக்கின்றனர். இந்தப் பூஞ்சைகள் தரும் வெளிச்சத்தில் படிக்கக்கூட முடியுமாம்!
