தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மக்காவ் வந்தாலே மகிழ்ச்சி!

மக்காவ் வந்தாலே மகிழ்ச்சி!

மக்காவ் வந்தாலே மகிழ்ச்சி!


PUBLISHED ON : மே 20, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விநோத செல்லப் பிராணிகள் கிடைக்கும் கடைகளில் அரிய வகைக் கிளிகள் ஏராளம் உண்டு. சென்னை வண்டலூர் பூங்காவில் நீங்கள் பார்த்து வியந்திருக்கும் ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க, தென் ஆப்பிரிக்க கிளிகளைக்கூட இந்தக் கடைகளில் பார்க்க முடியும். அந்த வகையில் பலரும் ஆசைப்படும், கண்டு வியக்கும் கிளியான 'மக்காவ்'வை சென்னையைச் சேர்ந்த சைய்யது வளர்த்து வருகிறார்.

நம்மூரில் பலரும் அசந்துபோகும் கிளி, மக்காவ். இதை எப்படி வாங்கணும்னு தோணுச்சு?

நான் சில ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தேன். அங்கு வல்லூறு பறவைகளை வளர்ப்பது, அங்குள்ளவர்களின் கலாசாரம். அவர்கள் மூலமாகத்தான் எனக்குப் பறவைகள் மீது காதல் வந்தது. எங்கள் வீட்டில் மகளுக்காக முதன்முதலில் ஆப்பிரிக்க சாம்பல் கிளி வாங்கினோம். அவளுக்கு அது நல்ல பொழுதுபோக்காக இருந்தது.

அதோடு, பறவைகள் பற்றி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தாள். மக்காவ்வைப் பற்றி நிறைய வீடியோக்களைப் பார்த்தாள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால்தான் வாங்கித் தருவேன் என்று கூறி நானும் வாங்கிக் கொடுத்து விட்டேன்.

மக்காவ் எந்த நாட்டைச் சேர்ந்தது?

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிளி இனம். இப்போது பலரும் இதை செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

மக்காவ் கிளியின் சிறப்பு?

எங்கள் வீட்டில் இருப்பது நீல நிற மக்காவ். ஒரு ஐந்து வயது குழந்தை உங்கள் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் வீடு இருக்கும். எனக்கு இரண்டு குழந்தைகள், இது என்னோட மூன்றாவது பிள்ளை. எப்போதும் விளையாட்டுத்தனமும், சுட்டித்தனமும்தான் இருக்கும். ஓர் இடத்தில் நிற்காமல், சுத்திக்கொண்டே இருப்பான். உங்களையும் விடமாட்டான். நீங்கள் ஏதாவது பொருளை கீழே போட்டால், அதை மறக்க வேண்டியதுதான். மக்காவ் தன்னையும் உங்களைப் போலவேதான் நினைச்சுப்பான். நீங்கள் கூப்பிட்டதும், அழகாக நடந்து உங்கள் கைமேல் ஏறி நிற்பான். அன்பை அள்ளிக்கொடுப்பான்.

என்ன மாதிரியான உணவு கொடுப்பீர்கள்?

காய்கறிகள், பழங்கள், நட்ஸ்கள் அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். இறைச்சி, ஒவ்வாமை தர்றதினால அதை மட்டும் கொடுக்க மாட்டோம். மற்றபடி நீங்கள் சமைக்கும் உணவைக் கொடுத்தாலே போதும்.

மக்கா வந்தபின் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் வந்ததா?

ஓடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் வாழ்க்கையை அனுபவிக்கிறோமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us