
விலங்குகளைப் பராமரிக்கும் அந்த தனியார் மிருகக் காட்சி சாலைக்கு, பாதுகாப்பு அதிகாரி வேலைக்கு ஆள் எடுத்தனர். கார்த்திக் விண்ணப்பித்தான். ஒரு வாரம் கழித்து அவனை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தனர். இவனும் விலங்குகள் பற்றி நிறைய தகவல்களைத் தேடித்தேடி படித்து, எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லிவிடலாம் என்ற தைரியத்துடன் நேர்முகத்தேர்வுக்குச் சென்றான்.
அங்கிருந்த அதிகாரி கேட்ட கேள்விக்கு எல்லாம் சரியான பதில் சொன்னான். கடைசியாக ஒரு கேள்வி என்று ஓர் அதிகாரி சொன்னார். இவனும் கேளுங்கள் என்பதுபோல பார்த்தான். 'நின்றிருக்கும்போது குட்டையாகவும், உட்கார்ந்திருக்கையில் உயரமாகவும் இருக்கும் விலங்கு எது?' என்று கேட்டார். அந்த ஒரு நிமிடத்தில் அவனுக்கு தலையே சுற்றிவிட்டது. எவ்வளவு யோசித்தும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. விடை உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் அவனுக்குச் சொல்லி உதவலாம்!
நாய். (என்ன ரொம்ப யோசிச்சீங்களா..ஹி..ஹி..ஹி..)

