உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 02, 2016

அ நிறம் | அளவு
இந்தியாவில் ஓர் ஆண்டில் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துகளால் சுமார் 1.5 லட்சம் பேர் பலியாகின்றனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைகின்றனர். அதிவேகப் பயணமே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாகிறது. நெடுஞ்சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டுவதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும் வகையில் 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய மாய வேகத்தடைகளை சாலைகளில் வரைவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் 14 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
