உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 02, 2016

அ நிறம் | அளவு
தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் பாதுகாப்பை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அவசர உதவி தேவைப்படும்போது, எச்சரிக்கை விடுக்கும், 'பட்டன்' வசதி எல்லா மொபைல் போன்களிலும் இருக்க வேண்டியது அவசியம். இதனால், எல்லா மொபைல் போன்களிலும் அவசர உதவி பட்டன் வசதி 2017ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கட்டாயமாக ஆக்கப்படுகிறது.
தற்போது ஸ்மார்ட்போன்களில் மட்டும் உள்ள ஜி.பி.எஸ். எனப்படும் ஒருவர் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ளக்கூடிய வசதியும், 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து போன்களுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
