PUBLISHED ON : ஆக 11, 2025

இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் மரியாதைக்குரிய, அமைதியான சுபாவம் கொண்ட வீரர் இவர். களத்தில் 'சுவர்' போல உறுதியாக நின்று ஆடுவார். அவரது தனிப்பட்ட வாழ்விலும் மிகவும் எளிமையாக இருப்பார்.
ஒருமுறை, அவரது குழந்தை படிக்கும் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது. அங்கே, பல பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றி ஆசிரியர்களிடம் பேச வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அந்தப் பிரபல வீரரும் எந்தவித முக்கியத்துவமும் கோராமல் மற்ற பெற்றோரைப் போலவே அமைதியாக வரிசையில் நின்றார்.
அவரை ஆச்சரியத்துடன் பார்த்த சில பெற்றோர்,
“நீங்கள் ஏன் வரிசையில்நிற்கிறீர்கள்? உள்ளே சென்றிருக்கலாமே?” என்று கேட்டனர். அவர் புன்னகையுடன், “நானும் ஒரு தந்தை, மற்ற பெற்றோர் போலவே என் குழந்தையின் ஆசிரியருடன் பேசக் காத்திருக்க வேண்டும் என்பதுதானே முறை?” என்று பதிலளித்தார். அவரது இந்த எளிமையும், அடக்கமும் அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
யார் இந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்?
விடைகள்: ராகுல் டிராவிட்

