
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல் பகுதியில் பசுமையான தடித்த இலைக் கொத்து. சொரசொரப்பான மேற்பகுதி. உள்ளே மஞ்சள் நிற சதைப்பகுதி. இனிப்பும், புளிப்புமாக சுவை கொடுக்கும் அன்னாசிப் பழத்தை (Pine Apple) எல்லோருக்கும் பிடிக்கும்தானே!
'அன்னாசி' என்பது போர்ச்சுக்கீசியச் மொழிச் சொல். பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்ட அன்னாசிப் பழத்தைத் தமிழில் 'செந்தாழை' பழம் என்கிறோம்.
வெப்ப மண்டலப் பழமான அன்னாசி நார்ச்சத்து மிக்கது. அன்னாசி ஒரு கூட்டுக் கனி. இது கொத்து மலர்களை (Inflorescence) உடையது. அன்னாசியின் ஒவ்வொரு மலரும் சூல் பிடித்துப் பழமாக ஆகும்போது ஒரே பழமாக அடுக்கடுக்காக அமைந்து விடுகிறது.
எனவே அன்னாசியில் ஒரே ஒரு பழம் இல்லை; அது பல பழங்களின் தொகுப்பு!

