PUBLISHED ON : நவ 19, 2018

“விலங்குகளுக்கும் உயிர்வாழ எல்லா உரிமைகளும் உண்டு. விலங்குகளையும் சக உயிராகப் பார்க்கும் பக்குவம் நம்மிடையே வரும்போது, அவற்றுக்கு உதவிசெய்யும் உணர்வு வெளிப்படும்” என்கிறார் எரிக்கா.
எரிக்கா, ஜிம், கிளேர் ஆகிய மூவரும், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தபோது, இராஜஸ்தான் பகுதியில், சாலை விபத்துகளில் அதிக விலங்குகள் இறப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
ஆகவே, 2002-இல் உதய்பூர் பகுதியில் Animal aid unlimited என்ற விலங்குகளுக்கான காப்பகத்தை உருவாக்கி, நடத்தி வருகின்றனர். விபத்து, நோய் தாக்குதலால் அவதிப்படும் விலங்குகளுக்கு மறுவாழ்வு அளித்து வருகின்றனர்.
விலங்குகளைக் காக்க, அவசர உதவி எண் ஒன்றை உருவாக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சாலை விபத்துகளால் அடிபட்ட விலங்குகள், நோயால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட விலங்குகள் குறித்த தகவல்கள் இவர்களிடம் சேர்ந்தன. இதனால், ஏராளமான விலங்குகள் காப்பாற்றப்பட்டன. இதுவரை 60,000க்கும் மேற்பட்ட விலங்குகள் காப்பாற்றப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்தும் இங்கு தன்னார்வப் பணிசெய்ய வருகின்றனர்.
இங்கு, பள்ளி மாணவர்களுக்கு, தங்குமிட வசதியோடு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
காப்பகத்தின் பணிகள்:
* விபத்துக்குள்ளான, நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்தல்.
* விலங்குகள் தங்குவதற்கான இருப்பிடம் அமைத்துக் கொடுத்தல்
