
உடல் நிலை சரியில்லாது போனால் சாப்பிடக்கூடியது 'மருந்து' என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் இதை வேறு பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன், நீதி நுாலில், 'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' என்று கூறியிருக்கிறார். அப்படியானால் மருந்தை எல்லோருக்கும் கொடுத்து விட்டு சாப்பிடவேண்டுமா? அப்பொழுதான் நம் உடல் நிலை குணமாகுமா? என்று கேட்கத் தோன்றுகிறதுதானே!
அப்படியில்லை. அந்தகாலத்தில், 'மருந்து'க்கு அமிர்தம் (அமுதம்) என்று பொருள். கிடைப்பதற்கு அரிய அமிர்தமே கிடைத்தாலும், தான் மட்டும் தனித்து உண்ணக் கூடாது. மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்து உண்ண வேண்டும். அதுதான் நல்ல பண்பாகும். அந்தக் கருத்தில்தான் ஔவையார் அப்படி கூறியிருக்கிறார். இப்போது காய்ச்சல், தலைவலி வந்தால் குணமாவதற்கு சாப்பிடும் வலி நிவாரணியாக வேறு பொருளில் குறிப்பிடுகிறோம்.
சின்ன சொல்தான் ! காலம் அதை எப்படி மாற்றி இருக்கிறது இல்லையா!

