PUBLISHED ON : அக் 03, 2016

புவியின் தென் துருவத்தில் உள்ளது அண்டார்டிகா கண்டம். முழுவதும் பனிப்படலங்களால் சூழப்பட்ட உறைபனிக் கண்டம். இந்தப்பகுதி. பனிப்படலங்கள் ஏன் உருகுகின்றன, அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், சூழலில் ஏற்படும் மாற்றங்கள், காற்றில் கரியமில வாயுவின் அதிகரிப்பு இவையே பனிப்படலங்கள் உருகக் காரணமாக இருக்கின்றன. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியன் டன் எடை அளவுக்கு பனிப்படலம் அண்டார்டிகாவில் உருகுகிறது. இந்த அளவு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடல் மட்டம் உயருவதால் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கடலோரச் சமூகங்கள் பாதிக்கப்படும். சூழல் பாதிப்புகளில் முதன்மையானதான புவி வெப்பமயமாதலே பனிப் படலங்கள் உருகுவதற்குக் காரணமாகின்றன. எரிபொருளாக உபயோகப்படுத்தப்படும் பெட்ரோலியம் இயற்கை வாயுவும், காடுகள் அழிக்கப்படுவதும் சூழல் மாசு அடைவதற்கான காரணம் ஆகின்றன. எனவே காற்றில் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரா ஃபிளோரா கார்பன் ஆகியவை கலப்பதைத் தவிர்க்க வேண்டும். அண்டார்டிகாவின் பனிப்படலம் முழுவதும் உருவினால் உலகின் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்ந்துவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா தெரிவித்திருக்கிறது. நாம் வாழும் பூமியின் சூழலைப் பாதுகாப்பது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு ஒப்பானது.
7 உலகின் ஏழாவது கண்டம் அண்டார்டிகா
14.5 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவு
5 உலகின் ஐந்தாவது பெரிய கண்டம்
98% அண்டார்டிகா பனிப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.
5000 மீட்டர் அண்டார்டிகாவில் 5000 மீட்டர் ஆழ்துளை இட்டால்தான் மண்ணைப் பார்க்க முடியும்.
உயிரினங்கள்: பெங்குவின், நீலத்திமிங்கிலம், சீல்
