தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/காற்றில் வளரும் செடிகள்!

காற்றில் வளரும் செடிகள்!

காற்றில் வளரும் செடிகள்!


PUBLISHED ON : அக் 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொரு நொடியும் உலகின் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் விவசாய விளை நிலங்கள் குடியிருப்புகளுக்கான மனைகளாக மாறிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இந்நிலையில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தானியங்கள் உற்பத்தி செய்வதற்கான நிலப்பரப்பு பூமியில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உலக நாடுகளில் மாற்று விவசாயம் குறித்தும், மண் இல்லாமல் விவசாயம் செய்வது குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் விளைவாகத் தோன்றியதுதான் காற்றில் வளரும் பயிர்கள். அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் பரிசோதனை முயற்சியாக ஈரப்பதமான காற்றில் விவசாயம் செய்வதில் வெற்றி கண்டுள்ளன. அதேசமயம், எதிர்கால நிலப்பற்றாக்குறைக்கு இந்த காற்றில் வளரும் விவசாயம் முழுமையான தீர்வல்ல என்பதே உண்மை. உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு அரிசியே முக்கிய உணவு. அரிசியை இதுபோன்று காற்றில் பயிரிட முடியாது. அதற்குத் தேவையான நிலத்தை எதிர்காலத்தில் எங்கே தேடுவது என்பது விடை காண முடியா கேள்வி.

ஏரோபோனிக்ஸ் (Aeroponics)

செடிகள் நூலில் கட்டப்பட்டு காற்றில் தொங்கியபடி வளரும். ஈரப்பதம் நிரம்பிய காற்று இதற்குத் தேவை. நீர்த் திவளைகளில் ஊட்டத் தாதுக்களைக் கரைத்துக் கலந்து அதன் மூலம் செடிகள் நன்றாக வளரச் செய்யப்படுகிறது.

'ஸ்கை ஃபார்ம்ஸ்' (Sky Farms)

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகளின் ஒளியில் மின்காற்றாடிகளால் விசிறப்படும் நீர்த்திவளைகள் உண்டு செடிகள் வளர்கின்றன. மண்ணில் பயிரிடுவதைவிட பல மடங்கு மகசூலை இம்முறையில் பெறலாம். 'ஸ்கை ஃபார்ம்ஸ்' முறையில் கீரைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை பல ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கலாம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us