PUBLISHED ON : ஜன 25, 2016

கணினியின் திரையில் அதிக வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிச்சத்தைக் குறைக்க, திரையின் மீது அதற்கென்று இருக்கும் பிரத்தியேகக் கண்ணாடியை (Anti-Glare Screen Guard - ஆண்ட்டி க்ளேர் ஸ்கிரீன் கார்டு) மாட்டிக்கொள்ளலாம். உங்களுக்கும் கணினித் திரைக்கும் இடையில் சுமார் 45 செ.மீ இடைவெளி விட்டு அமருங்கள்.
ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஐந்து நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு, பிறகு, கண்களை நன்றாகக் கழுவிவிட்டு, மீண்டும் வேலையைத் தொடங்குங்கள். இடை இடையே திரையிலிருந்து (Monitor) கண்ணைத் திருப்பி, வேறு பக்கம் (சுவர், ஜன்னல் போன்றவற்றை) பார்த்துவிட்டு, மறுபடியும் வேலையில் ஈடுபடுங்கள். எழுத்துக்களைப் பெரிதாக்கிக் கொள்வதன் மூலம் கண்ணுக்கு ஏற்படும் சோர்வைத் தவிர்க்கலாம். இதைப் படிக்கும்போதே, குறைந்தது சில முறையாவது கண் சிமிட்டினீர்கள் என்றால், 'விஷன் சிண்ட்ரோம்' (Vision Syndrome) பயம் அவசியமில்லை.
