தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'மொக்க' மகேஷ் 'ஷார்ப்' சங்கர்

'மொக்க' மகேஷ் 'ஷார்ப்' சங்கர்

'மொக்க' மகேஷ் 'ஷார்ப்' சங்கர்


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷார்ப்: டேய் மொக்க! பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) தெரியுமா?

மொக்கை: பெர்முடாஸ் தெரியும். முக்கோணம் தெரியாது.

ஷார்ப்: வட அட்லான்டிக் கடலோட மேல்பகுதியில பெர்முடா முக்கோணம்னு ஒரு பகுதி இருக்கு. இதை 'சாத்தானின் முக்கோணம்'னு அமெரிக்க மக்கள் சொல்வாங்க.

மொக்கை: ஏன் அங்க பேய், பிசாசு இருக்கா?

ஷார்ப்: இல்லடா. பெர்முடா முக்கோணத்துக்கு மேலே பறக்குற விமானங்களும், பக்கத்துல போற கப்பல், படகுகளும் காணாமப் போயிடுதாம். அதான் அப்டிச் சொல்றாங்க.

மொக்கை: அப்டி என்ன இருக்கு அங்க?

ஷார்ப் : என்னன்னு தெளிவாத் தெரியல. ஆனா, அந்த முக்கோணப் பகுதியைக் கடக்கும்போது விமானங்களோட திசைகாட்டிகள் செயலிழந்துடுதாம். அதனால ஆக்சிடென்ட் ஆகுதாம். வருஷத்துக்கு சராசரியா 4 விமானங்களும், 20 பந்தயப் படகுகளும் அந்த ஏரியாவுல காணாமப் போகுதாம்.

மொக்கை : ஐயய்யோ… இப்பிடி ஒரு பிரச்னை இருக்கும்போது, திரும்ப ஏன் அந்த வழியாப் போறாங்க?

ஷார்ப்: நீ சொல்றதும் சரிதான். இன்னொரு தகவலும் இருக்கு. வேற்றுக் கிரகவாசிகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடிச்சுட்டுப் போயிருக்கலாம்னு ஒரு வதந்தியும் இருக்கு.

மொக்க: வசந்தியா? அது யாரு? ஓகே ஓகே கோபிக்காத… நாம அங்கே போனாலும் காணமப் போயிடுவோமா?

ஷார்ப்: நாம ஏன்டா அங்க போகப் போறோம்? நம்மளால முடிஞ்சது, பக்கத்துல இருக்குற மெரீனாவரைக்கும் போயிட்டு வரலாம் வா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us