உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 21, 2023
அ நிறம் | அளவு
நீட் (Need), வான்ட் (Want)
இந்த இரண்டையும் சரியாகப் புரிந்து கொண்டால், தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, நிறைய சேமிக்கலாம்.
நீட் என்பது அவசியத்தேவை. வான்ட் என்பது நமக்கு விருப்பமானது; ஆனால், அது அத்தியா வசியமானது அல்ல.
கீழே உள்ளவற்றில் எது நீட், எது வான்ட் என கண்டுபிடியுங்கள்.
1. சுமனிடம் இருந்த ஒரே பை கிழிந்துவிட்டதால், அவன் புதிதாக ஒன்று வாங்கினான்.
2. விவேக்கின் வீட்டில் கணினி இருந்தும், அவன் அதிக பணம் கொடுத்து கேமிங் சென்டரில் விளையாடுகிறான்.
3. தினமும் தண்ணீர் வைக்கும் மண்பானை உடைந்துவிட்டதால், அம்மா வேறு பானை வாங்கினார்.
4. சான்வியிடம் நன்கு எழுதும் அழகிய பேனா இருந்தாலும், அவள் புதிதாக ஒன்று வாங்கி மகிழ்ந்தாள்.
விடைகள்!
1. Need, 2. Want, 3. Need, 4. Want
