தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நிலவுத் தமிழர்!

நிலவுத் தமிழர்!

நிலவுத் தமிழர்!


PUBLISHED ON : ஜூன் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயில்சாமி அண்ணாதுரை

பிறந்தநாள்: 2.7.1958

ஊர்: கோதவாடி, கிணத்துக்கடவு, கோவை.


பூமியில் இருக்கும் நம்மை, மேலிருந்து யார் பார்க்கிறார்களோ இல்லையோ செயற்கைக்கோள்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சந்திரனுக்கு 'சந்திரயான்', செவ்வாய்க்கு 'மங்கள்யான்' என வரிசையாக செயற்கைக்கோள்களைச் செலுத்தி, இஸ்ரோவை அடுத்தடுத்த தளத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை. இவர் பெங்களூரூவில் அமைந்துள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர்.

இவரது அப்பா ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். குடும்பத்தின் வறுமையைச் சமாளிக்க, அப்பாவுக்கு உதவியாக இருக்க வேண்டிய கடமை மூத்த மகனாகிய இவருக்கு இருந்தது. அப்பாவுக்கு, திமுக தலைவர் அண்ணா மீது இருந்த பற்றுதான் 'அண்ணாதுரை' என்ற பெயருக்குக் காரணம்.

அடிப்படைக் கல்வியைத் தமிழில் அரசுப் பள்ளிகளிலேயே படித்து, கோவை அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் தகவல் தொடர்பியலில் இளநிலை பட்டமும், பி.எஸ்.ஜி. கல்லூரியில் முதுநிலை பட்டமும் பெற்றார்.

படிப்பை முடித்து, 1982ல் இஸ்ரோ நிறுவனத்தில், இளநிலை ஆய்வாளராகச் சேர வாய்ப்பு வந்தது. அடுத்ததாக, 2003ல் கல்விக்கு உதவும் எஜுசாட் (Edusat) செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக இஸ்ரோ இவரை நியமித்தது. தனக்கு அளிக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்ததால், 2004ல் 'சந்திரயான் திட்ட இயக்குநர்' எனும் உயர் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. அக்டோபர் 22, 2008ல் சந்திரயான் 1ஐ முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நிலைநிறுத்தி, வல்லரசு நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதுமட்டுமில்லாமல், இந்தியாவின் முதல் நுண்ணலை உள்ளிட்ட தொலையுணர்வு செயற்கைக்கோள் (Indian remote sensing IRS satellite), செவ்வாய் கிரகத்தை ஆராயும் மங்கள்யான் திட்டத்தின் தலைமை இயக்குநராகவும் இருக்கிறார். 2019ல் சூரியனை ஆராயப் போகும் ஆதித்யா1 திட்டத்தை வழிநடத்துபவரும் இவரே!

நிலவில் மனிதன் குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லும் அண்ணாதுரை, கலாமைப் போல தனது விடுமுறை நாட்களை மாணவர்களுக்காகச் செலவிடுகிறார். தமிழகப் பள்ளிக் கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் இவருடைய வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.

விருதுகள்

பத்ம ஸ்ரீ (2016)

3- சந்திரயானுக்காக சர்வதேச விருதுகள்

4- விண்வெளி ஆய்வு விருதுகள்

5- முனைவர் பட்டங்கள்

இவருடைய நூல்கள்

கையருகே நிலா

கையருகே செவ்வாய்

அறிவியல் களஞ்சியம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us