தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூன் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 26, 1906 - ம. பொ. சிவஞானம் பிறந்த நாள்

விடுதலைப் போராட்ட வீரர். சிலப்பதிகாரத்தின் மீது கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக, 'சிலம்புச் செல்வர்' எனப் போற்றப்பட்டார். ம.பொ.சி. என அறியப்படுகிறார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிச் சிறப்பித்தது.

ஜூன் 27, 1964 - பி. டி. உஷா பிறந்த நாள்

இந்திய தடகள விளையாட்டு வீராங்கனை. அதிவேக ஓட்டத்தின் மூலம், தனி இடத்தைப் பிடித்தார். 1985, 1986ல் உலக தடகள விளையாட்டுகளில், முதல் பத்து பெண்களில் ஒருவராக விளங்கினார். 'இந்திய தடகளங்களின் அரசி', 'இந்தியாவின் தங்க மங்கை' என வர்ணிக்கப்படுகிறார்.

ஜூன் 27, 1880 - ஹெலன் கெல்லர் பிறந்த நாள்

இள வயதிலேயே பார்க்கும், கேட்கும், பேசும் திறன்களை இழந்திருந்தார். பார்வையற்றோர் நலனுக்கான அமைப்பை உருவாக்கி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பாடுபட்டார்.

ஜூன் 27, 1983 - பிரசன்ட சந்திர மஹலானோபிஸ் பிறந்த நாள்

வங்காள அறிவியலாளர், புள்ளியியல் அறிஞர். வானிலை, உயிரியல், மானுடவியல் என, பல்வேறு துறைகளில் புள்ளியியல் உதவியுடன் தீர்வு கண்டார். இவரால் பொருளாதாரத் திட்டமிடல், புள்ளியியல் வளர்ச்சித் துறை சீரடைந்தது. இவருடைய பிறந்த நாள் தேசிய புள்ளியியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 30, 1912 - மாதவையா கிருஷ்ணன் பிறந்த நாள்

காட்டுயிர் புகைப்படக் கலைஞர், இயற்கை ஆர்வலர், எழுத்தாளர். தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளின் முன்னோடி. காட்டுயிர்கள் பற்றி, தான் கேள்விப்பட்டதை எழுதாமல், நேரடியான கள அனுபவங்கள், ஆய்வுகள் மூலமாக சுற்றுச்சூழலை எழுதினார்.

ஜூன் 30, 1985 - மைக்கேல் பெல்ப்ஸ் பிறந்த நாள்

உலகின் தலைசிறந்த நீச்சல் வீரர். ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிகமாக 28 தங்கப் பதக்கங்களைப் பெற்ற தனிநபர். தங்க வேட்டை நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us