தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மேலும் மேலும் தகவல்...

மேலும் மேலும் தகவல்...

மேலும் மேலும் தகவல்...


PUBLISHED ON : மே 02, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இணைய வரலாற்றில் முக்கியமான உருவாக்கம் விக்கிபீடியா. கட்டற்ற தகவல் களஞ்சியமாக விளங்குகிறது விக்கிபீடியா. விக்கிபீடியாவை உருவாக்கியவர்கள் ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales), லாரி சேஞ்சர் (Larry Sanger) ஆகியோர். விக்கி (Wiki) என்பதற்கு, 'பகிரும் இணைய தளம்' (Shared Website) என்று பொருள். விக்கிபீடியா உருவாக்கப்பட்ட ஆண்டு 2001. 'விக்கிபீடியா தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகிறது. கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா/Encyclopedia) என்ற வார்த்தையில் உள்ள களஞ்சியம் (பீடியா/Pedia) என்ற வார்த்தை இதனுடன் இணைந்து 'விக்கிபீடியா' (Wikipedia) என்பது உருவானது. விக்கிபீடியா 300 மொழிகளில் தனது சேவையை வழங்குகிறது. ஒரு வருடத்தில் சுமார் 684 மில்லியன் மக்கள் விக்கிபீடியாவைப் பயன்படுத்துகிறார்கள். விக்கிபீடியாவில் உள்ள ஆங்கில மொழிக் கட்டுரைகளின் எண்ணிக்கை 3 மில்லியன். விக்கிபீடியாவில் விளம்பரங்கள் கிடையாது. எல்லாத் தகவல்களும், எல்லா மொழியிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்பதே விக்கிபீடியாவின் நோக்கம். விக்கிபீடியாவில் கட்டுரைகளைப் பதிகிறவர்கள் 'விக்கிபீடியன்ஸ்' (Wikipedians) என்று அழைக்கப்படுகிறார்கள். விக்கிபீடியா தகவல்களை உரிய ஆதாரத்துடன் யார் வேண்டுமானாலும் திருத்தும் வசதி உண்டு. விக்கிபீடியாவைப் பயன்படுத்துகிறவர்களில் 69% ஆண்கள், 31% பெண்கள். ஆங்கிலம், ஜெர்மன், ஃபிரஞ்ச் ஆகிய மொழிப் பதிவுகள் விக்கிபீடியாவில் அதிக நபர்களால் பார்க்கப்படுகிறது. உலகின் பிரபலமான இணைய தளங்கள் பட்டியலில் விக்கிபீடியா 6ஆவது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கிடைக்கும் நன்கொடைகளைக் கொண்டு விக்கிபீடியா நிர்வகிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us