உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 03, 2016

அ நிறம் | அளவு
குட்டிக் குட்டி சுண்டெலி
எட்டி எட்டிப் பார்த்தது
தட்டில் கொட்டிக் கிடந்ததாம்
பொட்டுக்கடலை ஈர்த்தது
தத்தித் தத்தி நடந்தது
தட்டுக் கிட்டேவந்தது
பொட்டுக் கடலை எடுத்தது
மெல்ல மெல்லக் கொறித்தது.
பூனைச் சத்தம் கேட்டது
பொந்து உள்ளே ஒளிந்தது
பூனை போகும் வரையிலும்
பொறுமையாக இருந்தது.
பொட்டுக்கடலைத் தட்டுக்கு
எறும்பு ஒன்று வந்தது
கடலை ஒன்ளறத் தூக்கியே
பொந்துப் பக்கம் போனது.
எறும்பு எடுத்துப் போனதை
எலியும் பறித்துக் கொண்டது.
திரும்ப எறும்பு வந்தது
மற்றதைச் சுமந்து போனது.
அதையும் எலி யார் பிடுங்கியது
அந்த எறும்பு அழுதது.
பார்த்திருந்த பூனையும்
சிரித்தபடி சொன்னது:
நறுக்கெனக் கடிக்க நானுனக்கு
சொல்லித் தரவும் வேணுமோ?
சுருக்கென வலிக்க, சுண்டெலியும்
சுட்டித்தனம்தான் செய்யுமோ?
- கீதாமதி
