தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான் யார்?

நான் யார்?

நான் யார்?


PUBLISHED ON : அக் 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருக்கும் செ.மேலப்பாளையம் எனும் ஊரில்தான் நான் பிறந்தேன். என் பெற்றோர் நாச்சிமுத்து,- கருப்பாயி. நெசவாளராக இருந்த தந்தைக்கு நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாக நானும் ஆரம்பப் பள்ளியிலேயே படிப்பை முடித்துக்கொண்டேன். எனக்கு 18 வயது நிரம்பியிருந்தபோது, தந்தைக்கு உதவியாக நெசவுத் தொழில் செய்தேன். தறி நெய்து குடும்பம் நடத்த முடியாமல் போகவே, கணக்காளர் வேலை தேடி வேறு ஊருக்குச் சென்றேன். அதற்கு அடுத்த வருடம் ராமாயி என்பவரைத் திருமணம் முடித்தேன்.

பிறகு காந்திய சிந்தனையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு, தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானேன். தேச பக்திப் பாடல்களைப் பாடி, அது தொடர்பான நாடகங்களையும் நடத்தி வந்ததால் பிரிட்டிஷ் போலீஸ் பட்டியலில் எனது பெயரும் இருந்தது.

அப்போதுதான் தேசமெங்கும் சுதந்திரப் போராட்டமும் ஆரம்பமானது. காந்தியை 1932ஆம் ஆண்டு கைது செய்தது ஆங்கிலேய அரசு. காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு, ஆங்கில அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.

எத்தனை கைது நடந்தாலும் சுதந்திரப் போராட்ட ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று முடிவு கட்டினோம். இந்திய தேசியக் கொடிகளுடன் நாங்கள் எழுப்பிய கோஷம் விண்ணை அதிர வைத்தது.

இதனால் கோபமான பிரிட்டிஷ் அரசு எங்கள் அனைவரையும் அடித்து நொறுக்கியது. ஒவ்வொருவராய் சுருண்டு விழ, எனது கையிலிருந்த, நம் தேசியக் கொடி மட்டும் தரையைத் தொடாமல் வானம் பார்த்தபடி பட்டொளி வீசியது. 'வந்தே மாதரம்' என்று விடாமல் நானும் வீர முழக்கம் செய்தேன். எனது கையிலிருந்த கொடியைப் பிரிக்க முடியாமல் என்னிடம் தோற்றுப்போனது ஆங்கிலேய அரசு!

எனது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. என்னுடைய நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004ல் சிறப்பு நினைவுத் தபால் தலையும் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. இப்போதும் என் பெயரில் இருந்து யாராலும் கொடியைப் பிரிக்க முடியாது!

'கொடிகாத்த' குமரன் (எ) திருப்பூர் குமரன்

பிறப்பு: அக்டோபர் 4, 1904

மறைவு: ஜனவரி 11, 1932

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us