தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நாகப் பாம்பும், நான்கு வகைகளும்!

நாகப் பாம்பும், நான்கு வகைகளும்!

நாகப் பாம்பும், நான்கு வகைகளும்!


PUBLISHED ON : அக் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய நாகங்கள் பொதுவாக நான்கு வகைப்படும். அவை:

1. இந்திய நாகம்/நல்ல பாம்பு (Spectacled cobra)

2. ஒற்றைச் சக்கர நாகம் (Monocled cobra)

3. ஆசிய நாகம் (Central asian cobra)

4. அந்தமான் நாகம் (Andaman Cobra)

1. இந்திய நாகம்/ நல்ல பாம்பு:

இதன் நச்சுத் தன்மை, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும்.

சராசரி நீளம்: 5 முதல் 6 அடி வரை

இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படும். இது சீண்டும்போது, கழுத்துப் பகுதியில் இருந்து பத்தியை (Hood) உயர்த்திக் காண்பிக்கும். இதைத்தான் நாம், நாகம் படம் எடுக்கிறது என்போம்.

அடையாளம்: Spectacled mark எனப்படும் கண் கண்ணாடி பத்தியை உயர்த்தும்போது தலையின் பின்புறம் 'U' போன்ற அடையாளத்தைக் காணலாம்.

2. ஒற்றைச் சக்கர நாகம்:

சராசரி நீளம்: 5 அடி

இரவு நேரத்தில் இரைதேடும்

இந்திய நாகத்துடன் ஒப்பிடும்போது, இவை சற்று கோபம் கொள்ளும் இனம்.

அதுவும் வேகமாக கடிக்கக்கூடிய நாகம்.

அடையாளம்: ஒற்றைச் சக்கர நாகம், வட இந்தியாவில் அதிகம் காணப்படும். பத்தியை உயர்த்தும் பொழுது, தலையின் பின் 'O' வடிவில் சக்கர அடையாளத்தைக் காணலாம்.

3. ஆசிய நாகம்:

சராசரி நீளம்: 4 அடி வரை

காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் மட்டுமே காணப்படும்.

நிறம்: பழுப்பு நிறம், பத்தியில் மற்ற நாகங்களைப் போன்ற அடையாளங்கள் எதுவும் இருக்காது.

இதனுடைய நச்சு, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும்.

4. அந்தமான் நாகம்

அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் இனம். மற்ற நாகங்களைப் போல் இல்லாமல், இதன் உடலில் கருப்பு நிற வரிகள் இருக்கும். பத்தியை உயர்த்தும்போது, தலையின் பின்புறம் 'O' வடிவில் இருக்கும்.

இந்திய நாகங்களின் குறிப்பு:

இந்த நான்கு வகை நாகங்களால் தீண்டப்பட்டால், அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். கடிபட்ட இடத்தில் கொப்புளங்கள், வீக்கம் ஏற்படும். நரம்பு மண்டலத்தைப் பாதிப்படையச் செய்வதால், பக்கவாதம் போன்ற அறிகுறிகளைக் காணலாம்.

நச்சு முறிவுக்கான மருந்து, இந்திய நாகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த 4 வகை நாகங்களும் எலபிடியே (Elapidae) எனப்படும் குடும்பத்தைச் சார்ந்தவை.

- முனைவர் ந.ச.மனோஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us