sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இயற்கை இன்பம்: பிலிப்பைன்ஸின் பொக்கிஷமான மலைகள்!

/

இயற்கை இன்பம்: பிலிப்பைன்ஸின் பொக்கிஷமான மலைகள்!

இயற்கை இன்பம்: பிலிப்பைன்ஸின் பொக்கிஷமான மலைகள்!

இயற்கை இன்பம்: பிலிப்பைன்ஸின் பொக்கிஷமான மலைகள்!


PUBLISHED ON : மார் 03, 2025

Google News

PUBLISHED ON : மார் 03, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிலிப்பைன்ஸ் நாட்டின் போஹோல் (Bohol) தீவில், இயற்கையின் அதிசயமாக சாக்லேட் மலைகள் (Chocolate Hills) அமைந்துள்ளன. சில சமயங்களில் 'உலகின் எட்டாவது அதிசயம்' என வர்ணிக்கப்படும் இந்த மலைகள், 1988ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸின் தேசியப் புவியியல் சின்னமாக அறிவிக்கப்பட்டதுடன், போஹோல் தீவின் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.

பெயருக்கு ஏற்றார் போலவே, இந்த மலைகள் சாக்லேட் நிறத்தில் காணப்படும் குன்றுகளாகும். வறண்ட காலங்களில் பழுப்பு நிறமாக மாறி, பார்ப்பதற்குப் பிரமாண்ட சாக்லேட் துண்டு போலத் தோற்றமளிக்கும். புவியியலாளர்கள், முற்காலத்தில் கடல் மட்டத்திற்கு மேலே இருந்த நதிகள், நீரோடைகளின் சுண்ணாம்பு படிமங்களே இந்த மலைகள் என்கின்றனர்.

இந்த மலைகளின் உயரம் மிகவும் குறைவு. ஏறத்தாழ 100 அடி முதல் 165 அடி வரை மட்டுமே இருக்கும். இருப்பினும், 51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளன. மரங்கள், செடிகள் இந்தச் சரிவுகளில் வளர்வதில்லை. 'கொகோன் கிராஸ்' (Cogon grass) என்ற ஒரு வகை விஷச் செடி இந்த மலைகளில் உள்ள தாவரங்களை அழித்துவிட்டதே இதற்கு முக்கியமான காரணம்.

எப்படியிருந்தாலும், சாக்லேட் மலைகள் உலக சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய ஓர் இடம்.






      Dinamalar
      Follow us