PUBLISHED ON : அக் 02, 2023

அ நிறம் | அளவு
சமீபத்தில் நடந்த பாரத் சக்தி டிரோன் கண்காட்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டாக்டிக்கல் இன்டர்டிக்ஷன் அண்டு அட்டாக் ஏர் வெஹிக்கல் (Tactical Interdiction & Attack Air Vehicle - TIAAV) டிரோன் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த வகை டிரோன்கள், கடல் மட்டத்தில் இருந்து 6 கி.மீ. உயரத்தில், மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் பெற்றவை. இந்த டிரோன் 6 மணிநேரம் இடைநில்லாமல்
400 கி.மீ. சுற்றளவுக்குப் பறந்து கண்காணிக்கும் ஆற்றல் பெற்றது. அதிநவீன முறையில் கண்காணிப்பதற்கும் உளவு பார்ப்பதற்கும் இவை உறுதுணையாக இருக்கும். இவை, நமது விமானப் படையின் திறன்களை மேலும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
