தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அசாம் வெளியிட்ட அறிவிப்பு!

அசாம் வெளியிட்ட அறிவிப்பு!

அசாம் வெளியிட்ட அறிவிப்பு!


PUBLISHED ON : அக் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக வங்கியின் அறிக்கைப்படி, உலகில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. நம் மொத்த மக்கள்தொகை தற்போது 133.92 கோடி.

அதிலும் குறிப்பாக, அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை தற்போது 3.09 கோடியாக உள்ளது. இங்கே ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 398 பேர் வசிக்கின்றனர்.

இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மக்கள்தொகை ஒவ்வோராண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அசாம் மாநிலத்தில் மட்டும் ஆண்டுதோறும், பத்து பத்து லட்சங்களாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்படிப் பெருகிவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த, அம் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. 2012-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு, அம் மாநிலத்தில் அரசு வேலை கிடைக்காது என்ற அறிவிப்பை அம் மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.

அதுமட்டுமன்றி, இந்த அறிவிப்பை எந்தவித பாரபட்சமுமின்றி நடைமுறைக்குக் கொண்டுவரும் என்றும் அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us