தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பெருங்கடல் நீரின் ஏற்றத்தாழ்வுகள்

பெருங்கடல் நீரின் ஏற்றத்தாழ்வுகள்

பெருங்கடல் நீரின் ஏற்றத்தாழ்வுகள்


PUBLISHED ON : ஜூலை 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருங்கடல் ஓதம் (Ocean Tide - ஓஷன் டைடு)

பெருங்கடல் நீரின் மட்டம் உயர்ந்து தாழ்வது ஓதம் எனப்படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையால் இது ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் 6 மணிநேர இடைவெளியில் இது நடைபெறும்.

கடல் மட்டம் உயர்வது 'உயர் ஓதம்' என்றும், தாழ்வது 'தாழ் ஓதம்' என்றும் அழைக்கப்படுகிறது.

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மிதவை ஓதம் ஏற்படுகிறது. இந்த நாட்களில் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்கின்றன. இத்தகைய நாட்களில் சூரியன், சந்திரன் ஈர்ப்பு விசையால், உயர் ஓதம் மிக உயர்ந்தும், தாழ் ஓதம் மிகத் தாழ்ந்தும் காணப்படும்.

தாழ் ஓதமானது, நிலவின் முதல் மற்றும் மூன்றாவது வளர்ச்சி நிலையில் ஏற்படுகிறது. இந்த நிலையில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியன செங்கோணத்தில் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் அமைந்துள்ளதால், உயர் ஓதம் தாழ்ந்தும், தாழ் ஓதங்கள் மிக உயர்ந்தும் காணப்படும்.

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us