
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. இந்தியக் கடற்படையின், 47வது துணைத் தலைவராகப் புதிதாகப் பொறுப்பேற்று உள்ளவர்?
அ. தினேஷ் கே திரிபாதி
ஆ. சஞ்சய் வத்சயன்
இ. ஹரி குமார்
ஈ. திலக் சந்தோஷ்
2. தமிழகம் முழுவதும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்களைச் சமீபத்தில் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனை வரும் நோயாளிகளை, இனி எப்படிக் கருத வேண்டும் என்று பேசினார்?
அ. மருத்துவ பயனாளி
ஆ. சேவைப் பயனாளி
இ. சேவைப் பயனாளர்
ஈ. மருத்துவ நுகர்வோர்
3. அமெரிக்காவில், எத்தனை இந்தியத் தூதரக மையங்கள் புதிதாகத் திறக்கப்பட்டு உள்ளன?
அ. நான்கு
ஆ. பத்து
இ. எட்டு
ஈ. ஆறு
4. போலந்து நாட்டின் அதிபராக, புதிதாகப் பதவியேற்று உள்ளவர்?
அ. கரோல் நவ்ரோக்கி
ஆ. அப்துல் லத்தீஃப்
இ. மைக்கேல் ஹிக்கின்ஸ்
ஈ. ஆன்ட்ரி ரஜோலினா
5. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில், முதலிடத்தில் உள்ளது எது?
அ. இந்தியா
ஆ. சீனா
இ. துருக்கி
ஈ. பிரேசில்
6. கிரீசில் நடந்த, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டியில், 65 கிலோ பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?
அ. காவியா
ஆ. ஸ்வேதா
இ. செளந்தர்யா
ஈ. அஸ்வினி
விடைகள்: 1. ஆ, 2. அ, 3. இ, 4. அ, 5. ஆ, 6. ஈ.

