தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பறவைகளின் சொர்க்க பூமி

பறவைகளின் சொர்க்க பூமி

பறவைகளின் சொர்க்க பூமி


PUBLISHED ON : நவ 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

சதுப்பு நிலம் (Marsh - மார்ஷ்)

அதிக ஆழம் இல்லாத, பரந்து விரிந்து காணப்படும் நீர்நிலை பகுதி. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் காணப்படும். சிறு தாவரங்கள், நீர்வாழ் விலங்குகள், உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் போன்றவற்றின் புகலிடம்.

பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் அமைந்திருக்கும். இந்த நிலங்கள், நிலத்தடி நீர் வளத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. மழைக்காலங்களில் அதிக அளவில் நீரை தக்கவைத்துக்கொண்டு, வெள்ளப் பாதிப்புகளை தடுப்பது இதன் முக்கிய பயனாகும்.

உவர் தன்மை கொண்ட சதுப்பு நிலத்தில், மாங்ரோவ் (Mangrove) மரங்கள் அதிகம் வளர்ந்திருக்கும். இந்த நிலப்பரப்பில் கூட்டமாக வளரும் சிறு தாவரங்கள் 'அலையாத்தி' தாவரம் எனப்படும். இந்தத் தாவரம் சுனாமி போன்ற பேரலைகளில் இருந்து, கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்கிறது.

சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டு, வேளாண் நிலங்களாகவும், வீட்டு மனைகளாகவும் ஆக்கப்படுவதால், புவி வெப்பம் அதிகரித்து, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. சதுப்பு நிலங்களை பாதுகாக்க, 'தேசிய சதுப்புநில பாதுகாப்பு மற்றும் நிர்வாக சட்டம்' இயற்றப்பட்டு உள்ளது.

சதுப்பு நில வகைகள்

உவர்தன்மை

நன்னீர்

தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்கள்

பழவேற்காடு

பள்ளிக்கரணை

பிச்சாவரம்முத்துப்பேட்டை

கோடியக்கரை

பூ நாரை (Flamingo)

நெடுங்கால் உள்ளான் (Black Winged Stilt)

நீள வால் இலைக் கோழி (Pheasant Tailed Jacana)

நீல தாழைக் கோழி (Purple Moorhen)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us