தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நானோ அறிவியலின் சூப்பர் ஸ்டார்!

நானோ அறிவியலின் சூப்பர் ஸ்டார்!

நானோ அறிவியலின் சூப்பர் ஸ்டார்!


PUBLISHED ON : நவ 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

கார்பனின் புறவேற்றுமை வடிவங்களான வைரம், கிராஃபைட் ஆகியவற்றை நாம் அறிவோம். நானோ அறிவியலில், தற்போதைய சூப்பர் ஸ்டார் 'கிராபின்' (Graphene) எனப்படும் ஒற்றை அணு அளவு தடிமன் கொண்ட, கரிம (Carbon --/ கார்பன்) அடுக்குகள்தான்.

பென்சில்களில் இருக்கும் 'கிராஃபைட்' (Graphite) தண்டை, தாளில் அழுத்தி எடுத்தால் ஒட்டிக்கொண்டு வரும் மெல்லிய படலம், 'கிராபின்'. கிராஃபைட் நீளம், அகலம், தடிமன் என்று மூன்று பரிமாணங்களைக் கொண்டது. ஆனால், கிராபின் இரண்டே பரிமாணங்களைக் கொண்டது. கிராபின் படிக அமைப்பு ஒரு தேன் கூடு போல அமைந்து உள்ளது.

இது, தாள் போல இருப்பதாலும், இதன் தடிமன் நானோ மீட்டர் (Nano Meter) அளவே இருப்பதாலும் 'கிராபின் நானோதாள் (Nanosheet - நானோஷீட்) எனப்படுகிறது. இதன் வெப்பம் கடத்தும் திறன், கிராஃபைட்டை விட நூறு மடங்கு அதிகம். சூழலுக்குக் கேடு விளைவிக்காத முறையில், குறைந்த செலவில் தயாரிக்கப்படும் 'கிராபின்' பயன்படுத்திய பொருட்கள், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

கிராபின் (Graphene)

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியலாளர்கள் ஆன்ட்ரி ஜெய்ம் (Andre Geim), கான்ஸ்டான்டின் நோவோஸ்லோவ் (Konstantin Novoselov), முதன் முதலில், 2004ல் கிராஃபைட்டில் இருந்து கிராபினை பிரித்து எடுத்தனர். இவர்களுக்கு, இதற்காக 2010ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us