
ஆப்பிளில் டார்டாரிக் அமிலம் உள்ளது.
தவறு. ஆப்பிளில் மாலிக் அமிலம் காணப்படுகிறது. இது ஒரு கரிமச் சேர்மம்;
டை கார்பாக்சிலிக் அமிலம். 1785ஆம் ஆண்டில் கார்ல் வில்ஹெல்ம் ஷீலே என்பவர், ஆப்பிள் சாற்றில் இருந்து மாலிக் அமிலத்தை முதன்முதலில் தனிமைப்படுத்தினார். 1787ஆம் ஆண்டில் அன்டோயின், 'மாலிக்' என்ற பெயரை முன்மொழிந்தார். இது ஆப்பிளுக்கான லத்தீன் வார்த்தையான 'மாலூம்' என்பதிலிருந்து பெறப்பட்டது.
ஊர்வன விலங்குகள் குளிர் ரத்தம் உடையவை.
உண்மை. குளிர் ரத்தப் பிராணிகளால் சொந்தமாக வெப்பத்தை உருவாக்கிக் கொள்ள முடியாது. இதனால் இவை தங்கள் சுற்றுப்புறத்தின் வெப்பநிலையைப் பெற்றுக்கொண்டு, அதையே தங்கள் உடலின் வெப்பநிலை ஆக்கிக் கொள்ளும். ஆகவே, இவற்றின் உடல் கோடை காலத்திலும், குளிர்காலத்திலும் வெவ்வேறு வெப்பநிலைகளில் இருக்கும். ஊர்வன, மீன்கள், ஆமைகள், பூச்சிகள், சிலந்திகள், முதலைகள் உள்ளிட்டவை, இந்த வகையைச் சார்ந்தவை. இவை வெப்பமான சூழலில் அதிக சுறுசுறுப்பாகவும், குளிரான சூழலில் மிக மந்தமாகவும் இருக்கும்.

