தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : செப் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. இந்திய விமானப் படைக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் போக்குவரத்து விமானத்தை, 'ஏர் பஸ்' என்ற நிறுவனம், இந்தியப் படையினரிடம் சமீபத்தில் ஒப்படைத்தது.அதன் பெயர் என்ன?

அ. போயிங் 737

ஆ. சி295

இ. டார்னியர் டு 228

ஈ. போயிங் சி-17

2. இந்தியாவில், கல்வி நிறுவனங்களில் சேர்வது, ஓட்டுனர் உரிமம் பெறுவது, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற, பிறப்புச் சான்றிதழை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான சட்டம், எப்போதில் இருந்து நடைமுறைக்கு வருகிறது?

அ. அக்டோபர் 2

ஆ. அக்டோபர் 15

இ. அக்டோபர் 1

ஈ. அக்டோபர் 8

3. கேரளத்தில், கடந்த 2018, 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது எந்த வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது?

அ. கோவிட்

ஆ. இபோலா

இ. நிபா

ஈ. டெங்கு

4. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா'வின், 'சந்திரன் - செவ்வாய்' கிரக ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவராக, எந்த நாட்டின் வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ஷாக்ட்ரியா நியமிக்கப் பட்டுள்ளார்?

அ. பாகிஸ்தான்

ஆ. இலங்கை

இ. மலேசியா

ஈ. இந்தியா

5. தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யக்கூடிய முன்மாதிரி ஆலை மற்றும் ஆய்வகத்தை, 'டிட்கோ' எனப்படும், தமிழகத் தொழில் வளர்ச்சி நிறுவனம் யாருடன் இணைந்து அமைக்க உள்ளது?

அ. டேன்சிட்கோ

ஆ. சென்னை ஐ.ஐ.டி.

இ. டேம்கோ

ஈ. சென்னை எஸ்.ஆர்.எம்.

6. ஜெம் அண்டு ஜுவல்லரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் கெளன்சில், இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த மாநிலத்தில் இருந்து நகைகளை, கூரியர் வாயிலாக ஏற்றுமதி செய்துள்ளது?

அ. குஜராத்

ஆ. ராஜஸ்தான்

இ. மஹாராஷ்டிரம்

ஈ. கர்நாடகம்

7. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில், மூன்று சக்கர வாகனங்களைத் தவிர, மற்ற அனைத்துவித வணிக வாகனங்களுக்கும், அபாய காலத்தில் ஒலி எழுப்பும் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்துவதை, அரசு கட்டாயமாக்கி உள்ளது?

அ. ஒடிசா

ஆ. தமிழ்நாடு

இ. கேரளம்

ஈ. தெலங்கானா

8. போஸ்னியாவில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவுக்கு மொத்தம் எத்தனை தங்கப் பதக்கங்கள் கிடைத்தன?

அ. பத்து

ஆ. ஒன்பது

இ. எட்டு

ஈ. ஐந்து

விடை: 1.ஆ, 2. இ, 3. இ, 4. ஈ, 5. ஆ, 6. இ, 7. அ, 8. ஆ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us