தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சொற்களுக்கு நடுவில் நிகழும் மாற்றம்

சொற்களுக்கு நடுவில் நிகழும் மாற்றம்

சொற்களுக்கு நடுவில் நிகழும் மாற்றம்


PUBLISHED ON : அக் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு சொற்றொடரை எழுதும்போது வெறுமனே சொற்களை அடுத்தடுத்து எழுதிவிட முடியாது. இரண்டு சொற்களுக்கும் நடுவில் ஏதாவது சொல்லுருபு வந்து அமரும்.

அந்தச் சொல்லுருபின் வேலை இரண்டு சொற்களுக்கும் இடையில் தோன்றும் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதாகும்.

முருகன் என்பவன் தன் நண்பன் முத்து என்பவனுக்குக் காட்டில் திரிந்த மயிலைக் காட்டினான் என்று வைத்துக்கொள்வோம். அதனை எப்படி எழுதுவோம்? “முருகன் முத்து மயில் காட்டினான்” என்று தொடர்பே இல்லாமல் எழுதுவோமா? அப்படி எழுதுவதில்லை. அதில் பொருள் நிறைவே இல்லை. மூன்று பெயர்களும் ஒரு வினைமுற்றும் பொருள் தெரிவிக்கப் போதுமானவையாக இல்லை.

பிறகு எப்படி எழுதுவது?

“முருகன் முத்துக்கு மயிலைக் காட்டினான்” என்று எழுதுவோம். இங்கே நான்கு சொற்களையும் சரியாகப் பொருத்தி வாக்கியத்தில் அமைத்து எழுதும்போது 'முத்து' என்பதை 'முத்துக்கு' என்று எழுதினோம்; 'மயில்' என்பதனை 'மயிலுக்கு' என்று எழுதினோம். அவ்வாறு எழுதிய பின் வாக்கியம் நிறைவாக அமைந்துவிட்டது.

இடையில் என்ன நடந்தது? முத்து என்ற சொல்லோடு 'கு' என்ற சொல்லுருபு சேர்ந்தது. மயில் என்ற சொல்லோடு 'ஐ' என்ற சொல்லுருபு சேர்ந்தது. சொல்லுருபுகள் என்பவை தனித்துப் பொருள் தருவதில்லை. சொல்லோடு சேர்ந்தால் மட்டும் உரிய பொருள் தரும். வேற்றுமை உருபுகள், உவம உருபுகள் என்று பலப்பல சொல்லுருபுகள் இருக்கின்றன. இங்கே நம் எடுத்துக்காட்டில் பயன்பட்ட ஐ, கு ஆகியன வேற்றுமை உருபுகள்.

முத்து + கு = முத்துக்கு, மயில் + ஐ = மயிலை என்று சொல்லுருபுகள், ஒரு சொல்லோடு சேர்ந்து பொருள் வேறுபடுத்திக் காட்டின.

இந்த ஐ என்னும் உருபினையும், கு என்னும் உருபினையும் நாம் எழுதும்போதும் பேசும்போதும் அடிக்கடி பயன்படுத்துகிறோம். பாட்டைக் கேட்டான், தண்ணீரைக் குடி, உண்மையைச் சொல், என ஐ என்னும் வேற்றுமை உருபினைத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.

பாட்டுக்குப் பாட்டு, அன்புக்குக் குறையில்லை, தண்ணீருக்குப் பஞ்சம் என்று கு என்னும் வேற்றுமை உருபினையும் நிறையவே பயன்படுத்துகிறோம்.

ஐ, கு ஆகிய இவ்விரண்டு உருபுகளும் ஒரு சொல்லின் கடைசியில் தோன்றிவிட்டால் அங்கே கட்டாயம் வலி மிகும்.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us