PUBLISHED ON : அக் 10, 2016

விந்தோக், நமீபியா : ஆப்பிரிக்காவில் காணப்படும் காண்டாமிருகங்களின் கொம்புகள், தங்கம், வைரத்தைவிட அதிக விலை மதிப்புடையதாக இருந்து வருகிறது. சீனா, வியட்நாம் நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்திற்கு காண்டாமிருகங்களின் கொம்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால்
காண்டாமிருகங்கள் சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டு வருகின்றன. காண்டாமிருகக் கொம்புகள் விற்பனையை முறைப்படுத்தாமல் இருப்பதாலேயே, கள்ளச் சந்தையில் பதுக்கல் காரர்களால் அவற்றின் விலை ஏற்றப்படுகிறது என்றும், அதன் விளைவாக மிக அதிக அளவில் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன என்றும், சில ஆப்பிரிக்க நாடுகள் கருதுகின்றன. இதன் விளைவாக காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கான வணிகத்தை நெறிப்படுத்த முறையான சட்டம் வேண்டும் என்று அந்த நாடுகள் வலியுறுத்துகின்றன. ஆப்ரிக்காவின் தென்பகுதியில் இருக்கும் நபீயாவைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கான விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.

