தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அரிசிக்கு மணமூட்டும் இலை

அரிசிக்கு மணமூட்டும் இலை

அரிசிக்கு மணமூட்டும் இலை


PUBLISHED ON : அக் 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாசுமதி இலை

ஆங்கிலப் பெயர்: 'பண்டன்' (Pandan), 'ஸ்குருபைன்' (Screwpine)

தாவரவியல் பெயர்: 'பண்டனஸ் அமாரிஃபோலியஸ்' (Pandanus Amarylifolius)

வேறு பெயர்கள்: ராம்பா (தமிழ்), பிரியாணிகைதா (மலையாளம்), ராம்பே (சிங்களம்)

பாசுமதி என்ற அரிசி வகையை, அதன் மணத்திற்காக நாம் சோறாகச் சமைக்கிறோம். பாசுமதி அரிசியின் மணத்தை சாதாரண அரிசிக்கும் தருகிற சிறப்புத் தன்மை உடையது 'பண்டன்' தாவரத்தின் இலைகள். இதனால் 'பாசுமதி இலை' என்ற பெயராலும் இது குறிப்பிடப்படுகிறது.

தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் ஒரு தாவரம் 'பண்டன்'. இது 'பண்டனாசியே' (Pandanaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. நறுமணம் மிக்க இந்த இலைகள், உணவு சமைக்கும்போது அரிசியில் கலந்து பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இனிப்புப் பொருட்கள், அசைவ உணவு போன்றவற்றிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இலைகள் புற்களைப் போல நீளமாகக் காணப்படும். 'பாசுமதி இலை' நிழல் பகுதியில் நன்கு வளரும். வீட்டுத் தோட்டங்களிலும் இதை வளர்க்கலாம். இதன் இலைகள் பச்சையாகவும், உலர வைத்தும் சமையலில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தலாம்.

- கி.சாந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us